WPL 2025 புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று எலிமினேட்டர் போட்டியில் மோதவுள்ளன. 


மும்பை இந்தியன்ஸ்:


ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணி, எட்டு போட்டியில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடைசியாக நடந்த குரூப் போட்டியில் ஆர்சிபி அணியிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இந்த போட்டியில் மும்பை அணி களமிறங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு இரண்டாவது முறையாக தகுதிப்பெற முயற்சிக்கும். மும்பை அணியை பொறுத்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல நிலையில் உள்ளது.


குஜராத் ஜெயண்ட்ஸ்:


அதே நேரத்தில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்து எலிமினேட்டருக்கு தகுதி பெற்றது. கடைசியாக குரூப்-ஸ்டேஜ் போட்டியில் மும்பை இந்தியனஸ்  அணியை எதிர்க்கொண்டு ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் வென்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணி போராடும்.


இது வரை இவ்விரு அணிகளும் 6 முறை சந்தித்துள்ளன, அந்த போட்டிகள் அனைத்திலும் மும்பை அணியே வெற்றிப் பெற்று உள்ளது. அதனால் முதல் முறையாக மும்பை அணியை வீழ்த்தும் நோக்கில் குஜராத் அணி களமிறங்கும். 


பிட்ச் ரிப்போர்ட்:


இங்குள்ள பிட்ச், குறிப்பாக முதல் இன்னிங்ஸின் போது, ​​பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இங்கு சராசரி முதல் இன்னிங்ஸின் ஸ்கோர் 168 ரன்கள். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸின் போது பந்துவீச்சாளர்களுக்கும் உதவி கிடைக்கும் என்பதால் எந்த கேப்டன் டாஸில் ஜெயிக்கிறாரோ, அவர் முதலில் பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்து, இரண்டாவது இன்னிங்ஸின் போது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான பிட்சில் மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து எதிர் அணியை கட்டுப்படுத்தலாம். 


எங்கு காணலாம்:


இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும், மேலும்  ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரடியாக காணலாம். இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.


உத்தேச அணி:


குஜராத் ஜெயண்ட்ஸ்


பெத் மூனி (கீப்பர்), ஹர்லீன் தியோல், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், சிம்ரன் ஷேக், பார்தி ஃபுல்மாலி, ஆஷ்லே கார்ட்னர் (கேப்டன்), டீன்ட்ரா டோட்டின், கருணா கன்வர், பிரியா மிஸ்ரா, மேக்னா சிங், காஷ்வீ கௌதம்


மும்பை இந்தியன்ஸ் அணி:


யாஸ்திகா பாட்டியா (கீப்பர்), ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), சஞ்சீவன் சஜானா, கமலினி, ஹெய்லி மேத்யூஸ், அமன்ஜோத் கவுர், அமெலியா கெர், நாட் ஸ்கிவர், நாடின் டி கிளர்க், ஷப்னிம் இஸ்மாயில், பருணிகா சிசோடியா