ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறக்கும் இளம் சிங்கம்...13 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி பற்றி சஞ்சு சாம்சன்

"நாங்கள் ஒரு சுவாரஸ்யமான அணியை உருவாக்கியுள்ளோம், 13 வயது முதல் 35 வயது வரை உள்ள வீரர்களுடன்—இளமை மற்றும் அனுபவத்தின் கலவையை உருவாக்கி" – சஞ்சு சாம்சன்

Continues below advertisement

டாடா ஐ.பி.எல் - ராஜஸ்தான் ராயல்ஸ்

JioHotstar-ல் ஒளிபரப்பாகும் சூப்பர்ஸ்டார் தொடரில் பிரத்யேகமாக பேசிய சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:

Continues below advertisement

 

"கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களில், நாங்கள் மிகச் சிறந்த வெற்றிப் பருவங்களை கண்டுள்ளோம். இந்த காலகட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மிக உயர்ந்த வெற்றி வீதத்தைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள முக்கியமான வீரர்கள் எங்கள் அணியில் விளையாடியதால், அது ஒரு குடும்பமாகவே உணர்ந்தது. ஆனால், ஐபிஎல் விதிகளின்படி, அந்த அணியைப் பிரித்து, புதிதாக மீண்டும் கட்டமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அந்த கட்டத்தில் தான் இப்போது நாங்கள் இருக்கிறோம்.

நாங்கள் புதிய மற்றும் அனுபவம் மிக்க வீரர்களின் கலவையுடன் ஒரு வித்தியாசமான அணியை உருவாக்கியுள்ளோம். இது எனக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது—புதிய வீரர்களை சந்திக்கவும், அவர்களுடன் உறவுகளை உருவாக்கவும், அவர்கள் எப்படிப் பணிபுரிகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும். உண்மையான மகிழ்ச்சி அதில்தான் இருக்கிறது. ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே உழைப்பு தொடங்குகிறது. அணியின் பயிற்சி நாட்களில், நான் அறையில் அமர்ந்திருக்காமல், என்னுடைய வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர்களுடன் நேரம் செலவிடுவேன். அனைவருடனும் உறவுகளை கட்டமைப்பதே எனக்கான முதன்மையான வேலை. அதில்தான் ஒரு அணியாக ஒன்றாக இணைந்து பயணிக்க முடியும். கேப்டனாக இருப்பதன் மகிழ்ச்சி அதில்தான் உள்ளது."

"எப்படி சில விஷயங்கள் நடக்கின்றன என்பது நிச்சயமாக ஆச்சரியமாக இருக்கிறது. என் முதல் சீசனில், ராகுல் சார் தானே எனை தேர்வு செய்தார். அவர் அணிக்காக புதிய வீரர்களை தேடிக்கொண்டு இருந்தார். என்னை பார்த்த பிறகு, அவர் என்னிடம் வந்து, ‘நீ என் அணிக்காக விளையாடலாமா?’ என்று கேட்டார். அந்த நாளிலிருந்து இன்று வரை, என் பயணம் மிகச் சிறப்பாக இருந்துள்ளது.

இப்போது நானே அந்த அணியின் கேப்டன். மேலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு ராகுல் டிராவிட் அணியின் பயிற்சியாளராக திரும்பியிருக்கிறார். இது மிகவும் தனிப்பட்ட மற்றும் உணர்வுப்பூர்வமான தருணம். அவர் எப்போதுமே ராஜஸ்தான் ராயல்ஸ் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே இருந்தார். அவருடன் மீண்டும் பணிபுரிய இயலுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணியில் இருக்கும் போதும், ராஜஸ்தான் அணியில் இருக்கும் போதும், அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். ஆனால் இப்போது, அவரின் பயிற்சியில் நானே ஒரு கேப்டனாக செயல்பட வேண்டும் என்பதே மிகுந்த பெருமை தருகிறது. எதிர்காலத்தில் அவரிடமிருந்து இன்னும் பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்காகக் காத்திருக்கிறேன். இது உண்மையில் உற்சாகமாக உள்ளது!"

 

"அவருக்கு கிரிக்கெட்டின் மீது உள்ள ஆர்வமே இதற்குக் காரணம். இது அவரின் கிரிக்கெட் மீதான மரியாதை. ஒரு தடவை அவரை நான் வெயிலில் நின்று, யாரும் இல்லாதபோது தனியாக நிழல் விளையாட்டு (shadow batting) செய்வதை பார்த்தேன். இன்று கூட அவர் கிரிக்கெட்டில் முழுமையாக மூழ்கியுள்ளார். அவரின் தீவிர ஆர்வத்திலிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்."

சஞ்சு சாம்சன் கேப்டனாக இருப்பதில் டிராவிட் அவருக்கு எவ்வாறு உதவியுள்ளார் என்பதையும் கூறினார்:

"நான் அவரிடம் இருந்து பல நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டேன். அவர் கேப்டனாக இருந்தபோது ஒருபோதும் விருப்ப பயிற்சிகளை தவிர்த்ததில்லை. அணியில் உள்ள இளம் வீரர்களை எப்படி நடத்த வேண்டும், மூத்த வீரர்களுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், அணிக் கூட்டங்களை எவ்வாறு நடத்த வேண்டும், புதிய வீரர்களை எப்படி வரவேற்க வேண்டும் என்பவற்றில் அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

அந்த சிறிய ஆனால் முக்கியமான விஷயங்கள் எனக்கு ஒரு கேப்டனாக இருப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. நான் தற்போது என் அணியில் அந்த அணுகுமுறைகளைச் செயல்படுத்த முயற்சிக்கிறேன்."

வைபவ் சூர்யவன்ஷி பற்றி சஞ்சு சாம்சன்

இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 13 வயதுடைய வைபவ் சூர்யவன்ஷி விளையாட இருப்பது பெரியளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இது குறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில் 

"இன்றைய இளம் வீரர்களுக்கு தன்னம்பிக்கை குறைவே இல்லை. அவர்கள் மிகவும் தைரியமானவர்கள். இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமையையும், விளையாட வேண்டிய கிரிக்கெட் பாணியையும் அவர்கள் நன்கு புரிந்துகொள்கிறார்கள். எனக்கு நேரடியாக ஆலோசனை வழங்குவதை விட, அவர்களை முதலில் கவனித்துப் புரிந்துகொள்வதே விருப்பம்—அவர்கள் கிரிக்கெட்டை எப்படி விளையாட விரும்புகிறார்கள், எதைப் பிடிக்கிறார்கள், என்ன மாதிரியான ஆதரவு அவர்களுக்கு தேவையென்று பார்க்கிறேன். அதன்பிறகு, அவர்களை ஆதரிக்க என்ன செய்ய வேண்டும் என முடிவெடுக்கிறேன். வைபவ் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்; அவர் அகாடமியில் பயிற்சிக்குள் இருந்தபோதே, ஏராளமான சிக்சர்களை அடித்தார். அவருடைய பவர்-ஹிட்டிங் திறமையைப் பற்றி பலர் பேசிக்கொண்டிருந்தனர். இன்னும் என்ன வேண்டும்? அவருடைய பலத்தை புரிந்து கொண்டு, அவரை உறுதியாக ஆதரிக்க வேண்டும். பெரிய சகோதரனைப் போல அவருக்குப் பக்கத்தில் இருப்பதே முக்கியம்."

வைபவ் உள்ளூர் போட்டிகளுக்கு தயாரா என்ற கேள்விக்கு, சஞ்சு தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு,

"அவரிடம் தேவையான எல்லா திறன்களும் உள்ளன. அவனை சரியான உடல் நிலையில் வைத்துக்கொள்வதோடு, அமைதியான சூழலை வழங்குவதும் முக்கியம். ராஜஸ்தான் ராயல்ஸ் எப்போதும் வீரர்களுக்குத் திருத்தமான, சாதகமான சூழலை உருவாக்குகிறது. அவருக்கு இது மிகவும் உதவும். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா அணிக்காக விளையாடக்கூடும். எனக்குத் தோன்றும் அளவில், அவர் ஐபிஎல்லுக்கு தயாராக இருக்கிறார். அவரது ஆட்டத்தைக் கண்காணிக்கலாம். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என நம்புகிறேன்." 

"

Continues below advertisement