WPL Final RCB vs DC LIVE:100 ரன்களை எட்டிய பெங்களூர்! அதிரடிக்கு மாறிய எல்லீஸ் பெர்ரி - ரிச்சா கோஷ்!

IPL Final: மகளிர் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி அணிகள் மோதும் ஸ்கோர் நிலவரங்களை கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 17 Mar 2024 10:28 PM
100 ரன்களை எட்டிய பெங்களூர்! அதிரடிக்கு மாறிய எல்லீஸ் பெர்ரி - ரிச்சா கோஷ்!

17.1 ஓவர்களில் 100 ரன்களை பெங்களூர் அணிக்கு எட்டியுள்ளது. எல்லீஸ் பெர்ரி - ரிச்சா கோஷ் ஆடி வருகின்றனர்.

31 ரன்களுக்கு அவுட்டான மந்தனா! காப்பாற்றுவாரா பெர்ரி?

பெங்களூர் அணிக்காக நிதானமாக ஆடி வந்த ஸ்மிரிதி மந்தனா 39 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

6 ஓவர்களில் 35 ரன்கள் தேவை! வெற்றியை வசப்படுத்துவார்களா மந்தனா- பெர்ரி?

பெங்களூர் அணியின் வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 35 ரன்கள் தேவைப்படுகிறது.

ரன் வேகத்தை துரிதப்படுத்திய மந்தனா - எல்லீஸ் பெர்ரி!

பெங்களூர் அணிக்காக மந்தனா - எல்லீஸ் பெர்ரி தங்களது ரன் வேகத்தை துரிதப்படுத்தியுள்ளனர். 

முதல் விக்கெட்டை இழந்தது பெங்களூர்! காப்பாற்றுவார்களா மந்தனா - பெர்ரி?

பெங்களூர் அணிக்காக அதிரடி காட்டிய வீரர் சோபி டிவைன் 32 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆனார். 

7 ஓவர்களில் 43 ரன்கள்! இலக்கை நோக்கி அதரடி காட்டும் பெங்களூர்!

இலக்கை நோக்கி ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.

113 ரன்களுக்கு ஆல் அவுட்டான டெல்லி கேபிடல்ஸ்! சாம்பியன் ஆகுமா ஆர்.சி.பி.?

டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி! பந்துவீச்சில் மிரட்டும் ஆர்.சி.பி.!

டெல்லி அணிக்காக அதிரடியாக ஆடிய ராதாவை 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆர்.சி.பி. அணி ரன் அவுட்டாக்கியது.

100 ரன்களை எட்டிய டெல்லி! எஞ்சிய விக்கெட்டுகளை வீழ்த்துமா ஆர்.சி.பி.!

டெல்லி அணி 16 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை எட்டியுள்ளது.

மாரிஜேன் கேப், ஜெஸ் ஜோனசன் அடுத்தடுத்து அவுட்! 6 விக்கெட்டுகளை இழந்த டெல்லி!

டெல்லி கேபிடல்ஸ் அணியின் மாரிஜேன் கேப், ஜெஸ் ஜோனசன் ஆஷாவின் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

டெல்லி கேப்டன் மெக் லேனிங் அவுட்! சுழலில் மிரட்டும் ஆர்.சி.பி.!

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் 23 ரன்களில் ஸ்ரேயங்கா பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார்.

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்! தலைகீழாக மாறிய ஆட்டம்!

மொலினெக்ஸ் வீசிய ஒரே ஓவரில் ஷபாலி வர்மா, மெமிமா ரோட்ரிக்ஸ், கேப்ஸி ஆட்டமிழந்தனர். 

அவுட்டானார் ஷபாலி வர்மா! நிம்மதி மூச்சு விட்ட ஆர்.சி.பி.!

டெல்லி அணிக்காக தொடர்ந்து அதிரடி காட்டிய ஷபாலி வர்மா 44 ரன்களில் அவுட்டானார்.

பவர்ப்ளேவில் 61 ரன்கள்! ஷபாலியை கட்டுப்படுத்துமா ஆர்.சி.பி.?

டெல்லி அணி ஷபாலி வர்மா அதிரடியால் 6 ஓவர்களில் 61 ரன்களை எடுத்துள்ளது.

தொடர்ந்து அதிரடி காட்டும் ஷபாலி வர்மா! எகிறும் டெல்லி ஸ்கோர்!

ஷபாலி வர்மா தொடர்ந்து அதிரடி காட்டி வருவதால் டெல்லி அணி ரன் ஜெட் வேகத்தில் ஏறிக் கொண்டு போகிறது.

4 ஓவர்களில் 41 ரன்கள்! அதிரடி காட்டும் டெல்லி! விக்கெட் வீழ்த்துமா பெங்களூர்?

டெல்லி அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷபாலி - மெக் லேனிங் அதிரடியால் 4 ஓவர்களில் 41 ரன்களை டெல்லி எடுத்துள்ளது.

டெல்லி அணியின் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடி!

டெல்லி அணிக்காக தொடக்க வீராங்கனையாக ஆடி வரும் ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி வருகிறார்.

டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்! பந்துவீச்சில் மிரட்டுமா பெங்களூர்?

டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. பெங்களூர் பந்துவீசி வருகிறது.

இறுதிப்போட்டியை காண குவியும் ரசிகர்கள்

மகளிர் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியை காண டெல்லி மைதானத்தில் பெங்களூர் - டெல்லி ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

Background

மகளிர் பிரமியர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.


பெங்களூர் - டெல்லி மோதல்:


ஆடவர் ஐ.பி.எல். தொடரில் இதுவரை கோப்பையே வெல்லாத இந்த இரு அணிகளின் ரசிகர்களும், மகளிர் பிரிவில் தங்கள் அணி முதன்முறையாக மகுடம் சூட ஆர்வத்துடன் உள்ளனர். குறிப்பாக, ஆர்.சி.பி. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்த பெங்களூர் அணியில் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா, ரிச்சா கோஸ், சோபி டிவைன் உள்ளனர். பெங்களூர் அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பவர் எல்லீஸ் பெர்ரி உள்ளார். அரையிறுதியில் மும்பை அணியை பெங்களூர் வீழ்த்த எல்லீஸ் பெர்ரி முக்கிய காரணமாக உள்ளார். பந்துவீச்சில் ரேணுகா சிங், சிம்ரன் ஆகியோருடன் முக்கிய வீராங்கனையாக ஸ்ரேயாங்கா பாட்டீல் உள்ளார். பேட்டிங், பவுலிங்கில் அசத்தும் இவரும் முக்கிய வீராங்கனையாக உள்ளார்.


டெல்லி அணியில் கேப்டன் மெக் லேனிங், தனியா பட்டியா, ஷபாலி வர்மா உள்ளனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனசன், ராதா யாதவ்வும் சிறப்பாக ஆடினால் டெல்லி அணிக்கு பலமாகும். பந்துவீச்சில் சதர்லண்ட், திதாஸ் சாது, அபர்ணா உள்ளனர். இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.