UPW-W vs GG-W: இறுதிவரை விறுவிறு... த்ரில் வெற்றி பெற்ற உத்தரபிரதேசம்..! குஜராத் போராடி தோல்வி..!

UPW-W vs GG-W: உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் அணிகள் இடையேயான போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 05 Mar 2023 09:51 PM
50 ரன்களை கடந்த உத்தரபிரதேச அணி..! வலுவான பார்ட்னர்ஷிப் அமையுமா..?

குஜராத் அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி ஆடி வரும் உத்தரபிரதேச அணி 50 ரன்களை எடுத்துள்ளது. 

20 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகள் - தடுமாறும் உத்தரபிரதேசம்

உத்தரபிரதேச அணிக்காக ஆட்டத்தை தொடங்கிய கேப்டன் ஹேலி, ஸ்வேதா, மெக்ராத் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 3 விக்கெட் இழப்பிற்கு 20 ரன்களை மட்டுமே உபி எடுத்து தடுமாறி வருகிறது.

கடைசி கட்டத்தில் கலக்கிய ஹர்லீன் தியோல்..! 170 ரன்கள் இலக்கை எட்டுமா உபி வாரியர்ஸ்..?

கடைசி கட்டத்தில் குஜராத் அணி அதிரடியாக ஆடியதால் அந்த அணி 169 ரன்களை 20 ஓவர்கள் முடிவில் எடுத்தது. இதனால், உத்தரபிரதேச அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதிரடிக்கு மாறி குஜராத்..! வலுவான இலக்கை நிர்ணயிக்குமா..?

குஜராத் அணிக்காக அதிரடியாக ஆடிய ஆஷ் கார்ட்னர் ஆட்டமிழந்தத பிறகு ஹர்லீன் தியோல் அதிரடியாக ஆடி வருகிறார். இதனால் அந்த அணியின் ஸ்கோர் ஏறி வருகிறது. 

14 ஓவர்களில் 100 ரன்களை கடந்த குஜராத் - அதிரடி காட்டுவாரா ஆஷ் கார்ட்னர்..?

குஜராத் அணிக்காக ஜோடி சேர்ந்துள்ள ஆஷ் கார்ட்னர் -ஹர்லீன் தியோல் ஆட்டத்தால் அந்த அணி 100 ரன்களை கடந்துள்ளது.

அடுத்தடுத்து விக்கெட்டுகள்..! குஜராத்தை தூக்கி நிறுத்தப்போவது யார்?

குஜராத் அணிக்காக அதிரடியாக ஆடிய மேக்னா 24 ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் அணி 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

3 ஓவர்களில் 30 ரன்கள்..! அதிரடியாக ஆடும் குஜராத்

உத்தரபிரதேச அணிக்கு எதிராக பேட்டிங்கைத் தொடங்கிய குஜராத் அணி 3 ஓவர்களில் 30 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. 

பெத்மூனிக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்ற ஸ்னே ராணா

பெத் மூனி காயம் காரணமாக விலகியிருப்பதால் குஜராத் அணிக்கு ஸ்னே ராணா கேப்டனாக களமிறங்கியுள்ளார். ஆட்டத்தை தொடங்கிய குஜராத் அணி 1 ஓவரில் 3 ரன்களை எடுத்துள்ளது.

Background

மகளிர் ஐ.பி.எல். தொடரின் 3வது போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் உத்தரப்பிரதேசம் - குஜராத் அணிகள் மோதுகின்றன.


உத்தரப்பிரதேச அணியை பொறுத்தவரை கேப்டன் அலிசா ஹீலி, துணை கேப்டன் தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரி, சோபி எக்லெஸ்டன், ஷப்னிம் இஸ்மாயில், தாலியா மெக்ராத், ராஜேஸ்வரி கெய்க்வாட், உள்ளிட்டோர் சிறந்த பார்மில் உள்ளனர். 


அதேசமயம் குஜராத் அணியில் கேப்டன் பெத் மூனி, ஹர்லீங் தியோல், ஆஷ்லி கார்ட்னெர், சோபியா டங்லி, அனபெல் சதர்லேண்ட், சினே ராணா, ஹேமலதா என சிறந்த வீராங்கனைகள் இருப்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். இவ்விரு போட்டிகளும் ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகின்றது. 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.