மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூர் அணி, நேற்று முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனால், மகளிர் ஐ.பி.எல். தொடரின் இறுதி சுற்றுக்கு யார் போவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இத்தகைய சூழலில், இன்றைய போட்டியில் டெல்லி, குஜராத் அணிகள் மோதுகின்றன.


டெல்லி, குஜராத் அணிகள் மோதல்:


புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி கடைசி இடத்தில் உள்ள குஜராத்தை எதிர்கொள்வதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


5 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வி என 8 புள்ளிகளை டெல்லி பெற்றுள்ளது. குஜராத் அணியை பொறுத்தவரையில், 5 போட்டிகளில் 1 வெற்றி, 4 தோல்விகள் என இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளது குஜராத் அணி.


குஜராத் அணியில் கேப்டன் பெத் மூனி, ஹர்லீன் தியோல், ஆஷ்லி கார்ட்னெர், சோபியா டங்லி, அனபெல் சதர்லேண்ட், சினே ராணா, ஹேமலதா என சிறந்த வீராங்கனைகள் இருப்பதால் இந்த போட்டியில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி சுற்றுக்கு போக முயற்சி செய்வார்கள்.


ஜெமிமா ரோட்ரிக்ஸ், மெக் லானிங், ஷஃபாலி வர்மா, ராதா யாதவ், ஷிகா பாண்டே, மரிசானே கப், டைட்டாஸ் சாது, ஆலிஸ் கேப்சி, தாரா நோரிஸ், லாரா ஹாரிஸ், ஜாசியா அக்தர், மினு மன்னி, தனியா பாட்டியா, பூனம் யாதவ், ஜெஸ், எஸ். அருந்ததி ரெட்டி, அபர்ணா மோண்டல் ஆகிய வீராங்கனைகள் டெல்லியில் உள்ளதால் எப்போதும் போல அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 


மற்ற அணிகளின் விவரம்:


5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 5 போட்டிகளிலும் வெற்றிபெற்று 10 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள உத்தர பிரதேச அணி, 5 போட்டியில் 2 வெற்றிகள், 3 தோல்வில் பெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணி, 1 வெற்றி 5 தோல்வியுடன் என 12 புள்ளிகளை பெற்று 4ஆவது இடத்தில் உள்ளது.