சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ராஜஸ்தான் வீரர் துரூவ் ஜுரேல் விக்கெட்டை வீழ்த்தியது தோனி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


16-வது சீசன் ஐபிஎல் தொடரினை வெல்வதற்கு அனைத்து அணிகளும் மும்முரமாக விளையாடி வருகின்றன. இதில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். குறிப்பாக சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு உள்ள ரசிகர் பட்டாளத்தினை நிரப்பும் அளவிற்கு இந்தியாவில் மைதானம் இல்லை என்றே கூறவேண்டும். தோனியின் கடைசி சீசன் இது தான் எனச் சொல்லப்படுவதால் அவரது ஆட்டத்தினை மைதானத்தில் நேரடியாக ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்து போட்டியை காணும் ரசிகர்கள் ஏராளம். இதனால் சென்னை அணியின் மற்ற வீரர்கள் ஆடுகளத்தில் பேட்டிங் செய்துகொண்டு இருக்கும்போதே மைதானத்தில் உள்ள ரசிகர்கள் “ We Want DHONI" என முழுங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். மேலும், தோனி களமிறங்கும்போது மிகுந்த ஆரவாரத்தில் ஈடுபடுகின்றனர். 


இதுதவிர தோனி கீப்பராக இருந்து வீரர்களை சரியாக ஃபீல்டிங் நிறுத்தி விக்கெட்டுகள் வீழ்த்தும் போதும் மைதானத்தில் ஏற்படும் ஆரவாரத்துடன் திரையரங்கம் தோல்வி அடைந்து விடும். இப்படியான ஒரு விக்கெட்டை தோனி தனது புத்திசாலித்தனமான நடவடிக்கையால் வீழ்த்தியுள்ளார். நேற்று (ஏப்ரல் 27) சென்னை அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தது.


ஆனால் போட்டியின் முதல்பாதியின் கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி அதிரடியாக ரன்கள் குவித்தது. குறிப்பாக ராஜஸ்தான் அணியின் ஜுரோல் அதிரடியாக ரன்கள் குவித்து வந்தார். குறிப்பாக சென்னை அணியின் பத்திரானாவின் பந்துகளை சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் விரட்டினார். ஆனால் இவரது விக்கெட்டை தோனி கைப்பற்றியது தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 






அதாவது போட்டியின் 20 ஓவரை பத்திரானா விச படிக்கல் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். பத்திரானா வீசிய 3-வது பந்தை படிக்கல் எதிர்கொள்ள அது பேட்டில் படாமல் கீப்பர் தோனியின் கைகளுக்குச் சென்றது. தோனி ஸ்டெம்பில் இருந்து சற்று விலகி இருந்த தோனி எதிர் முனையில் இருந்து ஜுரோல் கிரீஸ்க்குள் வருவதற்கு முன்னரே அவரை ரன் அவுட் செய்து விட்டார். தற்போது இந்த ரன் அவுட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், 41 வயதிலும் தோனியின் ஆட்ட நுணுக்கம் மிகச்சிறப்பாக இருப்பதைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.