இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வருபவர் விராட்கோலி. மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக வலம் வரும் கோலி, உலககோப்பைக்கு பிறகு டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில், நேற்று திடீரென நடப்பு ஐ.பி.எல். தொடருக்கு பிறகு தான் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாகவும், பேட்ஸ்மேனாக மட்டுமே அணியில் தொடர்வதாகவும் அறிவித்துள்ளார். விராட் கோலியின் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.


சமூக வலைதளங்களில் தங்களது வேதனைகளை அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இட்ஸ் சிம்ரன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கோலியின் கண்கள் அனைத்தையும் சொல்கிறது. எனது கண்ணீரை நிறுத்த முடியவில்லை. என்னால் அவரை இப்படி பார்க்க முடியவில்லை. தயவு செய்து கடவுளே அவருடன் நியாயமாக இருங்கள். நாங்கள் உங்களை நேசிக்கிறோம் கோலி என்று பதிவிட்டுள்ளார்.






தோனி என்ற சமூகவலைதளவாசி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருவதற்கு இதுதான் சரியான நேரம் என்று பதிவிட்டுள்ளார்.






இட்ஸ்அஞ்சான் என்பவர் கோலியின் பொய்யான சிரிப்பு என்னை மேலும் காயப்படுத்துகிறது என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.






குமார் என்பவர், யாரோ அவருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். மிகப்பெரிய அரசியல் அங்கு சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.






ஹர்சினி என்ற பெண், நீங்கள்தான் என்னை கிரிக்கெட் பார்க்க வைத்தீர்கள். இப்போது, நீங்கள்தான் என்னை கிரிக்கெட்டை வெறுக்கவும் வைத்துள்ளீர்கள் என்று தனது வேதனையை பதிவிட்டுள்ளார்.






பூரப் சர்மா என்பவர், சார் தயவு செய்து இதை செய்யாதீர்கள். எங்களுக்கு தெரியும். நீங்கள் அணியை தலைமை தாங்கி வெற்றி பெற வைப்பதற்கு தகுதியானவர்  என்று பதிவிட்டுள்ளார்.






ரஷிதா என்ற பெண், உங்கள் முடிவை கேட்டேன். அடுத்தடுத்து அதிர்ச்சிகள். இதை பற்றி நான் மேலும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், டிராபி வீடு தேடி வரும் என்று ஆறுதலாக பதிவிட்டுள்ளார்.






யஷ் விஸ்வா என்ற நபர் விராட்கோலி கேப்டனாக இல்லாத ஆர்.சி.பி. அணி. நான் இனி ஆர்.சி.பி. போட்டியை காணப்போவதில்லை.






ஆயு என்ற பெண், விராட்கோலி கேப்டன்சியை விட்டுச் செல்வதை என்னை மிகவும் காயப்படுத்துகிறது. அவர் ஓய்வு அறிவிப்பை நான் எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்றே தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.






ஷ்ருதி அகர்வால் என்ற பெண், விராட்கோலி தலைமை தாங்குவதற்கு என்றே பிறந்தவர். இதற்கு முன்பு இப்படியொரு பேரார்வம் கொண்ட கேப்டனை கண்டதில்லை. என்ன நடக்கிறதென்றே எனக்கு தெரியவில்லை. வேறு ஒருவர் இந்திய அணியை வழிநடத்துவதையும், ஆர்.சி.பி. அணியை வழிநடத்துவதையும் கற்பனை கூட செய்ய முடியவில்லை. நீங்கள்தான் எப்போதும் என்னுடைய கேப்டன் என்று பதிவிட்டுள்ளார்.






சஞ்ச் என்ற டுவிட்டர்வாசி, என்ன நடந்தாலும் எப்போதும் நீங்கள்தான் என்னுடைய கேப்டன் என்று பதிவிட்டுள்ளார்.






அஜித்குமாரின் ரசிகர் ஒருவர், கோலிக்கு தற்போது ஒரு அரவணைப்பு தேவைப்படுகிறது என்று தோனி மற்றும் கோலி கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  






சமூக வலைதளங்களில் தொடர்ந்து விராட் கோலிக்கு ஆதரவாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பலரும் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்குமாறும், சிலர் சென்னை அணிக்காக வந்து விராட்கோலி ஆட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.