வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2023) சீசனில் மிரட்டுவதற்காக விராட் கோலி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் சூழலில், விராட் கோலி திடீரென இன்று தனது 10 வது மதிப்பெண் சான்றிதழை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். சிறிது நேரம் மட்டுமே இருந்த மதிப்பெண் பதிவை கோலி நீக்கியிருந்தாலும், அந்த புகைப்படத்தை பதிவு செய்து அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
பேட்டிங்கில் பந்துகளை துரத்தி ரன்களை கணக்கிட்டு சதம் அடிக்கும் விராட் கோலி, 10 ஆம் வகுப்பு கணித பாடத்தில் வெறும் 51 மதிப்பெண்கள் மட்டும் எடுத்தார் என்றால் யாராவது நம்புவார்களா..? விராட் கோலி #LetThereBeSport என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி 10வது மதிப்பெண் பட்டியலை லீக் செய்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “உங்கள் மார்க்சீட்டில் குறைவாக இருக்கும் மதிப்பெண்கள் உங்கள் வாழ்க்கையில் முக்கியமானதாக இருப்பது எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது” என தெரிவித்திருந்தார். இதன்மூலம், கோலி தனது மற்ற பாடங்களுடன் ஒப்பிடும்போது தனது கணித மதிப்பெண்கள் மிகக் குறைவு என்று சுட்டிக்காட்டினார்.
10 ஆம் வகுப்பு பொது தேர்வில் விராட் கோலி ஆங்கிலத்தில் 83, இந்தியில் 75, கணிதத்தில் 51, அறிவியலில் 55, சமூக அறிவியலில் 81, தொடக்க அறிவியலில் 58 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மொத்தத்தில் கோலி 69 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், விராட் கோலி சதம் அடித்து பார்முக்கு திரும்பி அசத்தினார். கடந்த 2016 ம் ஆண்டு 4 சதங்கள் உள்பட 900 க்கு அதிகமான ரன்களை குவித்த நிலையில், இந்த வருடமும் அந்த பார்மை தனது பேட்டிங்கில் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 16 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றிபெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது. கடந்த் ஆண்டு கேப்டன்ஷியை கோலி மறுத்ததால் டு பிளெசிஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து, சஞ்சய் பங்கர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
வனிந்து ஹசரங்கா கடந்த 16 போட்டிகளில் 26 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். பேட்டிங்கில் ரஜத் படிதார் ஏழு இன்னிங்ஸ்களில் 333 ரன்கள் குவித்து அனைவரையும் ஈர்த்தார். கேப்டன் டு பிளெசிஸ் 16 போட்டிகளில் 468 ரன்களும், கோலி 16 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 341 ரன்களை குவித்தனர்.
IPL 2023 ராயல் சேலஞ்சர்ஸ் முழு வீரர்கள் பட்டியல்:
கேப்டன்: ஃபாஃப் டு பிளெசிஸ்
பேட்ஸ்மேன்கள்: ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார்
பந்துவீச்சாளர்கள்: முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, அவினாஷ் சிங் மன்ஹாஸ், ஜோஷ் ஹேசில்வுட், ராஜன் குமார், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப், கர்ண் ஷர்மா,
ஆல்ரவுண்டர்கள்: கிளென் மேக்ஸ்வெல், ஹர்ஷல் படேல், ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, மைக்கேல் பிரேஸ்வெல், வனிந்து ஹசரங்கா, மனோஜ் பந்தகே, மஹிபால் லோம்ரோர், சோமு யாதவ்
விக்கெட் கீப்பர்கள்: தினேஷ் கார்த்திக், ஃபின் ஆலன், அனுஜ் ராவத்