சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்  அறிவிக்கப்பட்ட நிலையில், மற்றொரு தலைப்பு சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்தது - விராட் கோலியின் பழைய 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இப்போது வைரலாகி வருகிறது.

கோலி 10 ஆம் வகுப்பு மதிப்பெண்

2023 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஜிதின் யாதவ் பகிர்ந்து கொண்ட மதிப்பெண் பட்டியல் மீண்டும் வைரலாகி உள்ளது. கோலி மொழி பாடங்கள் மற்றும் சமூக அறிவியலில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளார், கணிதம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில்  குறைந்த மதிப்பெண் பெற்றதாகவும் மதிப்பெண் பட்டியல் காட்டுகிறது. பாட வாரியாக அவரது மதிப்பெண்கள் இங்கே:

ஆங்கிலம் – 83 (கிரேடு A1)

இந்தி – 75 (கிரேடு பி1)

சமூக அறிவியல் – 81 (கிரேடு A2)

கணிதம் – 51 (கிரேடு C2)

தகவல் தொழில்நுட்பம் – 74 (கிரேடு C2)

அதிக மதிப்பெண்கள் எடுத்தவராக இல்லாவிட்டாலும், கோலியின் வெற்றிக் கதை, தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் ஒருவரின் திறனை வரையறுக்காது என்பதை நிரூபிக்கிறது.

மதிப்பெண் பட்டியலுடன், ஐ.ஏ.எஸ். ஜிதின் யாதவ் ஒரு உத்வேகம் தரும் கருத்தையும் பகிர்ந்துள்ளார். அதில்

"மதிப்பெண்கள் மட்டுமே முக்கிய காரணியாக இருந்திருந்தால், முழு தேசமும் இப்போது அவருக்குப் பின்னால் அணி திரண்டு இருக்காது. ஆர்வமும் அர்ப்பணிப்பும் தான் முக்கியம்."

இந்தச் செய்தி  மாணவர்களை, மிகவும் கவர்ந்தது. சராசரி மாணவரிலிருந்து உலகளாவிய கிரிக்கெட் ஐகானாக மாறிய விராட் கோலியின் பயணம், கடின உழைப்பு, கவனம் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை உண்மையிலேயே நம்மை சிறந்த இடத்திற்கு வழி வகுக்கும் என்பதை நினைவூட்டுகிறது.

கோலி ஓய்வு: 

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து  ஓய்வு பெற்றுள்ளது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய இழப்பாக உள்ளது.  இரு வீரர்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2027 ஆம் ஒரு நாள் உலகக்கோப்பையை முன்னிட்டு அவர்கள் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிகிறது.