ஐ.பி.எல். தொடரில் நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி. அணியும், ராஜஸ்தான் அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 189 ரன்களை விளாசியது. இந்த போட்டியில் கேப்டனாக டுப்ளிசிஸிக்கு பதிலாக முன்னாள் கேப்டன் விராட்கோலியே மீண்டும் கேப்டனாக களமிறங்கினார். கடந்த போட்டியிலும் கேப்டனாக விராட்கோலி களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.




190 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஜோஸ் பட்லர் டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல், ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினர். ஹர்ஷல் படேல் வீசிய ஆட்டத்தின் 13.4வது பந்தில் ஜெய்ஸ்வால் விளாசிய பந்தை விராட்கோலி மிக எளிதாக கேட்ச் பிடித்தார்.


கேட்ச் பிடித்ததும் விராட்கோலி பெவிலியனில் அமர்ந்திருந்த தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்தார். தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அப்போது, பெவியலினில் இருந்த அனுஷ்கா சர்மா வெட்கப்பட்டு சிரித்தார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.






கிரிக்கெட் உலகின் மிகவும் அழகான தம்பதிகளாக உலா வருபவர்கள் விராட்கோலி – அனுஷ்காசர்மா ஆவார்கள். இவர்களுக்கு வாமிகா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது. விராட்கோலி நடப்பு தொடரில் அசத்தலாக பேட்டிங் செய்து வருகிறார். நடிகை அனுஷ்காசர்மாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்த விராட்கோலி கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.


இந்த தொடரில் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 4 அரைசதங்களை விளாசியுள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் ட்ரெண்ட் போல்ட் பந்தில் துரதிஷ்டவசமாக முதல் பந்திலே டக் அவுட்டாகினார்.




நேற்றைய போட்டியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பச்சை நிற ஜெர்சியில் ஆர்.சி.பி. அணி களமிறங்கியது. வழக்கமாக பச்சை நிற ஜெர்சியில் இறங்கினால் தோல்வியையே சந்திக்கும் பெங்களூர் அணி நேற்றைய போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணிக்காக டுப்ளிசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் அதிரடியில் மிரட்டினர். டுப்ளிசிஸ் 39 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 64 ரன்கள் விளாசினார். மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 77 ரன்கள் எடுத்தார். 


இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணிக்காக ஜெய்ஸ்வால் 47 ரன்களும், படிக்கல் 52 ரன்களும் எடுத்தனர். கடைசிகட்டத்தில் துருவ் ஜோயல் அதிரடியாக 16 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனாலும், பெங்களூர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


மேலும் படிக்க: IPL SRH vs DC: டெல்லிக்கு எதிராக ஆதிக்கத்தை தொடருமா ஹைதரபாத்..? இதுவரை ஐ.பி.எல். வரலாற்றில் நடந்தது என்ன?


மேலும் படிக்க: IPL Points Table: கெத்தா முதலிடத்திற்கு சென்ற சென்னை...! அப்போ மற்ற அணிகள் புள்ளிப்பட்டியலில் எந்த இடம்?