ஐபிஎல் தொடரானது தொடங்கப்பட்டது முதலே அதிரடிக்கு பெயர் போன ஒன்று. கடந்த 2008ம் ஆண்டு முதல் போட்டியிலேயே கொல்கத்தா அணிக்காக விளையாட பிரண்டன் மெக்கலம் 158 ரன்களை அடித்து மிரட்டினார். அன்று தொடங்கி இன்று வரை ஓயாத இந்த பேட்டிங் ரெக்கார்ட் தினம் ஒன்றாக பதிவாகி வருகிறது.
இப்படி இருக்கும் ஐபிஎல் போட்டியில் பேட்ஸ்மேன்கள் மட்டும்தான் சாதனை படைத்தார்கள் என்று சொன்னால், பந்து வீச்சாளர்கள் கணக்கு எங்கே போகும்..? ஐபிஎல் தொடரானது பல பந்துவீச்சாளர்களை இந்திய அணிக்கு தந்துள்ளது. பும்ரா, அஷ்வின், ஜடேஜா, ஷமி, சிராஜ், ஹர்திக், அர்ஷ்தீப் சிங் என அடுக்கி கொண்டே போகலாம். அப்படி இருக்க, நேற்று பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் அஷ்வின் புது சாதனை ஒன்றை சைலண்டாக படைத்துள்ளார். அவற்றை இங்கு பார்ப்போம்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக டாட் வீசிய பந்த்வீச்சாளர்களில் ரவிசந்திரன் அஷ்வின் தற்போது முதலிடத்தில் இருக்கிறார். இவர் இதுவரை 188 இன்னிங்ஸில் விளையாடி 4068 டாட் பந்துகளை வீசியுள்ளார். இவருக்கு அடுத்த படியாக 153 இன்னிங்ஸில் விளையாடி சுனில் நரைன் 3595 டாட் பந்துகளுடன் இரண்டாம் இடத்திலும், 160 இன்னிங்ஸில் 3416 டாட் பந்துகளை வீசி ஹர்பஜன் சிங் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
170 இன்னிங்ஸில் 3412 டாட் பந்துகளுடன் பியூஸ் சாவ்லா 4வது இடத்திலும், 152 இன்னிங்ஸில் 3376 டாட் பந்துகளுடன் புவனேஷ்வர் குமார் 5வது இடத்தில் இருக்கிறார்.
மேலும், ரவிசந்திரன் அஷ்வின் மட்டுமே 4000 அதிகமான டாட் பந்துகளை ஐபிஎல் தொடரில் வீசிய முதல் வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.
இந்த தொடரில் அதிக டாட் பந்துகள் யார் வீசியுள்ளார்..?
குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது ஷமி மற்றும் பெங்களுரு அணியின் சிராஜ் ஆகியோர் ஐபிஎல் 2023 தொடரில் அதிக டாட் பந்துகளை வீசியவர்கள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில் அதிகளவில் வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ரவிச்சந்திரன் அஷ்வின், பிஷ்னோய், மிட்செல் சாண்ட்னர், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ரஷித் கான் உள்ளிட்ட சில சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் 15 இடங்களில் உள்ளனர்.
வீரர்கள் | போட்டிகள் | ஓவர்கள் | டாட் பந்துகள் | விக்கெட்டுகள் |
முகமது சிராஜ் | 7 | 28 | 89 | 13 |
முகமது ஷமி | 6 | 23 | 74 | 10 |
போல்ட் | 6 | 24 | 66 | 9 |
அர்ஷ்தீப் சிங் | 7 | 25 | 65 | 13 |
வருண் சக்கரவர்த்தி | 7 | 25.4 | 60 | 10 |
துஷார் தேஷ்பாண்டே | 7 | 25.2 | 56 | 12 |
அஷ்வின் | 7 | 27 | 56 | 9 |
ரவி பிஷ்னோய் | 7 | 26.3 | 55 | 8 |
பியூஸ் சாவ்லா | 6 | 23 | 55 | 9 |