சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வரும் ஐபிஎல் போட்டி வரும் 31-ந் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத் அணியும் அகமதாபாத்தில் நடக்கவுள்ள போட்டியில் மோதவுள்ளது. இதற்கு சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பயிற்சி செய்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






தோனி பங்கு பெறும் இறுதி தொடராக இது இருக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த வீடியோவில், நெட்ஸில் பேட்டிங் பயிற்சியின் போது தோனி நோ லுக் சிக்ஸர் அடிக்கிறார். தோனியின் இந்த வீடியோவை ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகின்றனர்.


அடுத்த கேப்டன் யார்..? 


சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு தோனி போகும்போதும் சிறந்த தலைமையை சிஎஸ்கே அணிக்கு கொடுத்துவிட்டு செல்வார் என்ற அடிப்படையில் ரவீந்திட ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், ஒரு சில போட்டிகளுக்கு பிறகு மீண்டும் தோனிக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.


கடந்த 2022 சீசனில் சென்னை அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. இதற்குப் பிறகு, இந்த ஆண்டு ஏலத்தில், அணி தனது அணியில் பென் ஸ்டோக்ஸ் போன்ற ஒரு சிறந்த ஆல்-ரவுண்டரை இணைத்துள்ளது, அவர் அடுத்த ஆண்டு அணியின் கேப்டனாகவும் செயல்பட வாய்ப்புள்ளது. 


புதிய மைல்கல்:


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி இதுவரை ஐபிஎல் தொடரில் 234 போட்டிகளில் விளையாடி 4,978 ரன்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டு வெறும் 22 ரன்கள் எடுத்து 5,000 ரன்களை கடப்பார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 7வது வீரர் என்ற பெருமையை தோனி படைப்பார். 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:  மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ரிருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயீன் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், தீபக் சாஹர், சி. , மதிஷா பத்திரனா, சிமர்ஜித் சிங், பிரசாந்த் சோலங்கி, மகிஷ் திக்ஷ்னா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷித், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், பகத் வர்மா.