Narrowest Win By Run: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 14 போட்டிகளில், ஒரு ரன் வித்தியாசத்தில் பல அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 


ஐதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி:


நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பேட்ஸ்மேன்கள் ரன் மழ பொழிந்து வருகின்றனர். 200+ ரன்கள் என்ற கடினமான இலக்கை கூட அநாயசமாக சேஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, நிதிஷ்குமார் ரெட்டியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ஜெய்ஷ்வால் மற்றும் பராக் அணியை சர்இவில் இருந்து மீட்டனர். அந்த அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது, புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட்டை வீழ்த்தி ஐதராபாத் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்ற்இ பெறச் செய்தார். அந்த அணி ஐபிஎல் வரலாற்றில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும்.


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை..!



  • மே 21, 2008: ஐபிஎல் அறிமுகமான 2008ம் ஆண்டே, அந்த தொடரின் முதல் அணியாக பஞ்சாப் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தொடரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய அந்த அணி 189 ரன்களை சேர்க்க, மும்பை அணி 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  • மே 17, 2009: பஞ்சாப் அணி 134 ரன்களை சேர்க்க, டெக்கான் சார்ஜர்ஸ் அணி 133 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது

  • ஏப்ரல் 29, 2012: டெல்லி அணி 152 ரன்கள் சேர்க்க ராஜஸ்தான் அணி 151 ரன்கள் மட்டும் சேர்த்து தோல்வியடைந்தது

  • மே 3, 2012: முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி வெறும் 120 ரன்களை மட்டுமே சேர்க்க, புனே வாரியர்ஸ் இந்தியா அணி 119 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது

  • ஏப்ரல் 9, 2015: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 150 ரன்களை சேர்க்க, டெல்லி அணி 149 ரன்களை மட்டுமே சேர்த்து வெற்றி வாய்ப்பை இழந்தது

  • ஏப்ரல் 27, 2016: குஜராத் அணி 172 ரன்கள் சேர்த்து டெல்லி அணிக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது

  • மே 9, 2016: பெங்களூர் அணி 175 ரன்கள் சேர்க்க, இலக்கை நோக்கி அதிரடியாக விளையாடினாலும் பஞ்சாப் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது

  • மே 21, 2017:  தொடரின் இறுதிப்போட்டியில் 129 ரன்கள் சேர்த்த மும்பை அணி, புனே அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது

  • ஏப்ரல் 21, 2019: பெங்களூர் அணி 161 ரன்கள் குவிக்க, சென்னை அணி 160 ரன்கள் மட்டும் சேர்த்து தோல்வியுற்றது

  • மே 12, 2019:  மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் சேர்க்க, அந்த இலக்கை எட்ட முடியாமல் சென்ன அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

  • ஏப்ரல் 27, 2021: பெங்களூர் அணி 171 ரன்களை சேர்த்து. டெல்லி அணியை 1 ரன் வித்தியாத்தில் வெற்றி பெற்றது

  • மே 20, 2023: லக்னோ அணி 176 ரன்களை சேர்க்க, 175 ரன்களை மட்டுமே சேர்த்து கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது

  • ஏப்ரல் 21, 2024: கொக்ல்கத்தா அணி 222 ரன்களை சேர்க்க பெங்களூர் அணி 221 ரன்களை மட்டுமே சேர்த்து அதிர்ச்சி தோல்யுற்றது