SRH vs MI LIVE SCORE :விறுவிறுப்பான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய மும்பை

IPL MI vs SRH : மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையேயான ஆட்டத்தின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 17 May 2022 11:29 PM
விறுவிறுப்பான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய மும்பை

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி போராடி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி அவுட்டாகிய டிம்டேவிட்..!

தமிழக வீரர் நடராஜன் வீசிய 18வது ஓவரில் மும்பை வீரர் டிம் டேவிட் 3 சிக்ஸர்கள் விளாசி நிலையில் அதே ஓவரில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகினார். 

நம்பிக்கை அளித்த சாம்ஸ் அவுட்..!

மும்பை அணிக்காக அதிரடியாக ஆட முயற்சித்த சாம்ஸ் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால், மும்பை ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். 

மும்பை வீரர் திலக்வர்மா அவுட்..!

மும்பை அணிக்காக அதிரடியாக ஆட முயற்சித்த திலக்வர்மா 8 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். 

13 ஓவர்களில் 120 ரன்கள்..! அதிரடி காட்டும் மும்பை...!

ஹைதராபாத் அணிக்கு எதிராக பேட் செய்து வரும் மும்பை அணி ரோகித், இஷான்கிஷான் அதிரடியால் 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. இப்போது, மும்பை அணிக்காக திலக் வர்மாவும், சாம்சும் அதிரடியாக ஆடி வருகின்றனர். 

மும்பை அணிக்கு 194 ரன்கள் இலக்கு..! ராகுல்திரிபாதி, பிரியம் கார்க், பூரண் அதிரடி..!

ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை விளாசியுள்ளது. இதனால், மும்பை அணிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதிரடி அரைசதம் அடித்த ராகுல்திரிபாதி அவுட்..!

ஹைதராபாத் அணிக்காக தொடர்ந்து அதிரடியாக ஆடிய ராகுல்திரிபாதி 76 ரன்களில் அவுட்டாகினர். அவர் 44 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் ஆட்டமிழந்தார். 

அதிரடி காட்டிய பூரண் அவுட்..!

ஹைதராபாத் அணிக்காக அதிரடி காட்டிய நிகோலஸ் பூரண் அவுட்டாகினார். அவர் 22 பந்தில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 33 ரன்கள் விளாசி அவுட்டாகினார். 

பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசும் ராகுல் திரிபாதி..!

ஹைதராபாத் அணிக்காக அதிரடியாக ஆடி வரும் ராகுல் திரிபாதி பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாசி வருகின்றனர். 

ஹைதராபாத் அணி அதிரடி ஆட்டம்..! 15 ஓவர்களில் 150 ரன்களை நெருங்கிய ஹைதராபாத்..!

ஹைதராபாத் அணியினர் அதிரடியால் அந்த அணி 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. தற்போது, ஹைதராபாத் அணி 15 ஓவர்களின் முடிவில் 148 ரன்களை எடுத்துள்ளது. ராகுல் திரிபாதி 55 ரன்களுடனும், பூரண் 36 ரன்களுடனும் அதிரடியாக ஆடி வருகின்றனர்.  

அதிரடி காட்டும் ஹைதராபாத்..! 6 ஓவர்களில் 57 ரன்கள்..!

ஹைதராபாத் அணியின் பிரியர் கார்க் மற்றும் ராகுல் திரிபாதி இருவரும் இணைந்து 6 ஓவர்களில் 57 ரன்கள் விளாசி அதிரடியாக ஆடி வருகின்றனர். 

முதல் விக்கெட்டை இழந்தது ஹைதராபாத்

மும்பை அணிக்கு எதிராக முதலில் பேட் செய்யும் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 9 ரன்களுக்கு அவுட்டானார். 4 ஓவர்கள் முடிவில் 31 ரன்களுக்கு ஹைதரபாத் ஆடி வருகிறது. 

Background

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 65வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியினரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிய நிலையில், சன்ரைசர்ஸ் அணியும் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் இந்த போட்டியில் களமிறங்குகிறது. புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணிக்கு ப்ளே ஆப் வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.  இந்த போட்டியில் பிரம்மாண்ட வெற்றி பெற்று, பிற அணிகளின் வெற்றி தோல்வியும் சாதகமாக இருந்தால் மட்டுமே ஹைதராபாத்திற்கு வாய்ப்பு கிட்டும்.  








 



- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.