மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும்,  பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய சுப்மன்கில்லும், சஹாவும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். சந்தீப்சர்மா வீசிய 3வது ஓவரில் சுப்மன்கில் தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன் அவுட் ஆனார். சுப்மன் 2 பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்திருந்தார்.




குஜராத் அணிக்காக அதிரடியாக ஆடிய விருத்திமான் சஹா ரபாடா பந்தில் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். ஆனால், அதே ஓவரில் 17 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் விழுந்ததால் ஹர்திக் – சாய் சுதர்சன் ஜோடி நிதானம் காட்டியது. பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி 42 ரன்களை எடுத்திருந்தது.


அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நிதானமாக ஆடினார். ஆனாலும், ரிஷிதவான் வீசிய  பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஹர்திக் அவுட்டானர். இதனால், குஜராத் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், டேவிட் மில்லர்- சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தனர். 8 ஓவர்கள் முடிவில் குஜராத் 50 ரன்களை எட்டியது. 10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 62 ரன்களை எடுத்தது.




10வது ஓவருக்கு பிறகு டேவிட் மில்லரும், சாய் சுதர்சனும் அதிரடியாக ஆட முயற்சித்தனர். ஆனால், டேவிட் மில்லர் லிவிங்ஸ்டன் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து 11 ரன்களில் அவுட்டானார். பின்னர், ராகுல் திவேதியா களமிறங்கினார். இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக ஆடத் தொடங்கினார்.


மறுமுனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திவேதியா ரபாடா பந்தில் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடந்த சில போட்டிகளில் அதிரடியாக ஆடிய ரஷீத்கான் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த சாய்சுதர்சன் அரைசதம் அடித்து அசத்தினார்.




ஆனால், மறுமுனையில் சங்கவான் 2 ரன்களில் போல்டானார். அடுத்து வந்த பெர்குசனும் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 143 ரன்களை 8 விக்கெட்டுகளை இழந்து எடுத்தது. தமிழக வீரர் சாய் சுதர்சன் அபாரமாக ஆடி 50 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண