IPL RCB vs SRH LIVE : 8 ஓவர்களில் போட்டியை முடித்த சன்ரைசர்ஸ் .. ஆர்சிபி அணி படுத் தோல்வி.. !
RCB vs SRH : பெங்களூர் - ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தியுள்ளது.
சன்ரைசர்ஸ் அணி 6 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்துள்ளது.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 68 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 7ஆவது விக்கெட்டை இழந்துள்ளது. ஆர்சிபியின் ஷாபாஷ் அகமது 7 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
9 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகியுள்ளார்.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி முதல் பந்தில் டக் அவுட்டாகியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டூபிளசிஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Background
ஐ.பி.எல். தொடரின் 36வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதன்படி, பெங்களூர் அணி முதலில் பேட் செய்ய உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -