RCB vs DC LIVE : டெல்லி அணிக்கு எதிரான போட்டி : பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ரிஷப் பண்ட் தலைமையில் டெல்லி அணியும், டூ பிளிசஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதுகின்றன.

Continues below advertisement

LIVE

Background

ஐ.பி.எல். தொடரின் 27ஆவது ஆட்டத்தில் இன்று  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இன்னும் சற்றுநேரத்தில் தொடங்க உள்ள இந்தப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

 
Continues below advertisement
23:51 PM (IST)  •  16 Apr 2022

RCB vs DC LIVE : டெல்லி அணிக்கு எதிரான போட்டி : பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

23:16 PM (IST)  •  16 Apr 2022

RCB vs DC LIVE : டெல்லி அணிக்கு 12 பந்துகளில் 34 ரன்கள் தேவை!

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்கு 12 பந்துகளில் 34 ரன்கள் தேவையாக உள்ளது. 

22:59 PM (IST)  •  16 Apr 2022

RCB vs DC LIVE : 15 ஓவர் முடிவில் டெல்லி அணி 115/ 5

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களுடன் தடுமாறி வருகிறது. 

22:39 PM (IST)  •  16 Apr 2022

RCB vs DC LIVE : 66 ரன்களில் வார்னர் அவுட்.. கழட்டிய ஹசரங்கா!

பெங்களூர் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி ரன் குவித்த வார்னர் ஹசரங்கா வீசிய 12 வது ஓவரில் 66 ரன்களில் LBW முறையில் அவுட்டானார். 

22:22 PM (IST)  •  16 Apr 2022

RCB vs DC LIVE : டீம்தான் மாறுச்சு... ஆளு அதே வார்னர்தான்! அரைசதம் கடந்து மிரட்டல்

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் அரைசதம் கடந்து வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

22:08 PM (IST)  •  16 Apr 2022

RCB vs DC LIVE : பவர்பிளே முடிவில் டெல்லி அணி 57/1

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. 

21:43 PM (IST)  •  16 Apr 2022

RCB vs DC LIVE : 1 ஓவர் முடிவில் டெல்லி அணி 9/0

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 1 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது. 

21:09 PM (IST)  •  16 Apr 2022

RCB vs DC LIVE : அதிரடிக்காட்டும் தினேஷ் கார்த்திக்.... அதே பார்ம்... அதே அடி!

ரஹ்மான் வீசிய 18 ஓவர் ஓவரில் தொடர்ந்து 4 பௌண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்து 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். 

20:39 PM (IST)  •  16 Apr 2022

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் ஃபீல்டிங் தேர்வு

Sponsored Links by Taboola