SRH vs PBKS LIVE : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி - பேட்டிங்கில் அசத்திய மார்க்ராம், பூரான்
தவான் தலைமையில் பஞ்சாப் அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி. 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி தொடர்ந்து 4ஆவது வெற்றியை ருசித்துள்ளது.
12 பாலில் 13 ரகள் எடுத்தால் ஹைதராபாத் அணி வெற்றி
ஹைதராபாத் அணிக்கு 18 ரன்களில் 21 ரன்கள் தேவையாக உள்ளது.
15 ஓவரில் 111 ரன்கள் குவித்த ஹைதராபாத் இன்னும் வெற்றி பெற 41 ரன்கள் தேவை. களத்தில் பூரான், மார்க்ராம் உள்ளனர்.
152 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடி வரும் ஹைதராபாத் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஹைதராபாத் பவுலர் உம்ரான். கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள் விழுந்தன.
பஞ்சாப் அணி ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து அரைசதம் கடந்து 60 ரன்களில் அவுட் ஆனார்.
களமிறங்கியது முதல் நிதானமாக ஆடிவந்த ஷாருக்கான் 28 பந்துகளில் 26 ரன்கள் அடித்து புவி வீசிய 17 வது ஓவரில் அவுட் ஆனார்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 16 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
13 ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் லிவிங்ஸ்டன், ஷாருக்கான் களத்தில் இருக்கின்றனர்.
உம்ரான் மாலிக் வீசிய 8 வது ஓவரில் பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா 8 பந்துகளில் 11 ரன்கள் அடித்து மாலிக்கிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ஜானி பாரிஸ்டோ விக்கெட் வீழ்ந்ததன் மூலம் தற்போது பஞ்சாப் அணி 6.2 ஓவர்களில் 48 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பிரப்சிம்ரன் சிங் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் நடராஜன் இந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
பஞ்சாப் அணி முதல் விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் கேப்டன் தவான் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இரண்டு ஓவர் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் அடித்தது
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. காயம் காரணமாக பஞ்சாப் அணி கேப்டன் மயங்க் அகர்வால் இந்தப்போட்டியில் விளையாடாமாட்டார். அவருக்கு பதிலாக தவான் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
Background
ஐ.பி.எல். தொடரின் 28ஆவது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இன்னும் சற்றுநேரத்தில் மும்பையின் டிஓய் பட்டீல் மைதானத்தில் போட்டியில் தொடங்க இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -