IPL KKR vs LSG :விறுவிறுப்பான ஆட்டத்தில் லக்னோ வெற்றி..! ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி...!
IPL KKR vs LSG : ஐ.பி.எல். போட்டியில் லக்னோ - குஜராத் அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே உடனுக்குடன் காணலாம்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று லக்னோ ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
கடைசி கட்டத்தில் விறுவிறுப்பை ஏற்றும் விதமாக ரிங்கு சிங்கும், சுனில் நரைனும் சிக்ஸர்களாக விளாசியதால் கொல்கத்தா வெற்றிக்கு கடைசி 6 பந்தில் 21 ரன்கள் தேவைப்படுகிறது.
கொல்கத்தாவின் கடைசி நம்பிக்கையாக இருந்த ஆண்ட்ரே ரஸல் 5 ரன்களில் அவுட்டாகினார். இதனால், கடைசி 19 பந்தில் கொல்கத்தா வெற்றிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது.
கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் 28 பந்தில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 50 ரன்கள் விளாசிய நிலையில் அவுட்டாகினார்.
லக்னோவிற்கு எதிராக சேஸ் செய்து வரும் சாம்பில்லிங்ஸ்- ஸ்ரேயாஸ் ஜோடி 25 பந்தில் 50 ரன்களை விளாசியது.
கொல்கத்தாவின் ராணா அவுட்டாகிய பிறகு களமிறங்கிய பில்லிங்ஸ் அதிரடியாக ஆடி வருவதால் கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை விளாசியுள்ளனர்.
கொல்கத்தா அணிக்காக அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 22 பந்தில் 42 ரன்கள் விளாசி அவுட்டாகினார்.
இமாலய இலக்கை நோக்கி ஆடி வரும் கொல்கத்தா அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 60 ரன்களை விளாசியுள்ளது.
கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் நிதிஷ்ராணா அதிரடியாக ஆடி வருகிறார். இதனால், கொல்கத்தா 4 ஓவர்களில் 31 ரன்களை எடுத்துள்ளது. ஆவேஷ்கான் வீசிய 4வது ஓவரில் மட்டும் நிதிஷ் ராணா 5 பவுண்டரி விளாசினார்.
கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஜீத் தோமர் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார். இவர்தான் டி காக்கிற்கு 12 ரன்களில் கேட்ச் கோட்டைவிட்டார்.
கொல்கத்தா அணிக்காக ஆட்டத்தை தொடங்கிய வெங்கடேஷ் அய்யர் முதல் ஓவரிலே டக் அவுட்டாகி அதிர்ச்சி தொடக்கம் அளித்தார்.
ஐ.பி.எல். வரலாற்றிலே முதல் விக்கெட்டுக்கு அதிக ரன் எடுத்த பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை கே.எல்,ராகுல் மற்றும் குயின்டின் டி காக் 189 ரன்களை எட்டி படைத்துள்ளனர்.
கொல்கத்தா அணிக்கு எதிராக அதிரடியில் மிரட்டி வரும் குயின்டின் டி காக் 59 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார்.
குயின்டின் டி காக் மற்றும் கே.எல்.ராகுல் அதிரடியால் லக்னோ 17 ஓவர்களிலே 149 ரன்களை எட்டியுள்ளது.
லக்னோ அணியின் தொடக்க வீரர் குயின்டின் டி காக் 36 பந்துகளில் 50 ரன்கள் விளாசியுள்ளார்.
லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் நடப்பு ஐ.பி.எல். தொடரில் மட்டும் 500 ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.
கே.எல்.ராகுல் மற்றும் டி காக் அதிரடியால் லக்னோ அணி 7.2 ஓவர்களிலே 50 ரன்களை கடந்துள்ளது. டி காக் 28 ரன்களுடனும், ராகுல் 25 ரன்களுடனும் உள்ளனர்.
கே.எல்.ராகுல் மற்றும் குயின்டின் டி காக் அதிரடியால் லக்னோ அணி 6 ஓவர்கள் முடிவில் 44 ரன்களை எடுத்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் லக்னோ அணியின் கேப்டன் கே,.எல்.ராகுல் நிதானமாக ஆட, குயின்டின் டி காக் அதிரடியாக ஆடி வருகிறார். தற்போது வரை லக்னோ அணி 3 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்துள்ளது.
Background
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் லக்னோ அணி தனது ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும். அதேசமயத்தில் ப்ளே ஆப் ரேசில் நீடிக்க கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. ஏற்கனவே குஜராத் அணி ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் அடுத்த மூன்று இடங்களுக்கு மற்ற அணிகள் மல்லுகட்டி வருகின்றனர்.
இந்த போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியும் முழு மூச்சில் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -