GT vs CSK LIVE : சென்னைக்கு எதிரான போட்டி : குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
GT vs CSK LIVE : புனேவில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேருக்கு நேர் எதிர்கொள்கிறது.
சென்னைக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிராவோ வீசிய 19 ஓவரில் ரஷித் ஒரு பௌண்டரி அடித்து 21 பந்துகளில் 40 ரன்களில் வெளியேறினார். பின்னால் வந்த அல்சாரி ஜோசப் அடுத்த பந்தே , ஜார்டனிடம் கேட்சானார். இறுதியில் குஜராத் அணிக்கு 6 பந்துகளில் 13 ரன்கள் தேவையாக இருந்தது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணிக்கு 36 பந்துகளில் 76 ரன்கள் தேவையாக உள்ளது.
பிராவோ வீசிய 13 வது ஓவரில் ராகுல் திவாட்டியா 6 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மில்லர் 28 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரராக களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விருத்திமான் சஹா 11 ரன்களில் ஜடேஜா பந்தில் அவுட் ஆனார்.
தீக்ஷனா வீசிய நான்காவது ஓவரில் அபினவ் மனோகர் 12 பந்துகளில் 12 ரன்கள் அடித்து மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்தார்.
3 ஓவர் முடிவில் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறுகிறது குஜராத். முதல் மற்றும் இரண்டாவது ஓவரில் விக்கெட்டுகளை எடுத்து அசத்தியது சென்னை.
குஜராத் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். ருதுராஜ், அம்பாதி ராயுடு சிறப்பான ஆட்டம்
18 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து இருந்தது.
யஷ் டாயல் வீசிய 17 வது ஓவரில் அடித்து ஆட முயற்சி செய்த ருதுராஜ் 48 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராயுடு, ஜோசப் வீசிய 15 வது ஓவரில் 46 ரன்களில் அவுட் ஆனார்.
குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி 14 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் முதல் அரைசதம் அடித்தார். 37 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தல்
குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்துள்ளது.
அல்சாரி ஜோசப் வீசிய 6 வது ஓவரில் மொயின் அலி 1 ரன்களில் அவுட்டாகி நடையைக்கட்டினார்.
குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி 6 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.
Background
15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று புனேவில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக இருந்தாலும், நடப்பு தொடரின் நிலவரப்படி குஜராத் அணி பலம் மிகுந்த அணியாக வலம் வருகிறது.
நடப்பு தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்த சென்னை அணி கடந்த போட்டியில் பெங்களூர் அணியுடன் வெற்றி பெற்றதால் உத்வேகம் பெற்றுள்ளது. கடந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று 5 போட்டியில் 4 வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -