மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட் செய்வதாக கூறினார்.




இதையடுத்து, முதல் பேட்டிங்கைத் தொடங்கிய சென்னையின் ராபின் உத்தப்பாவும், ருதுராஜ் கெய்க்வாட்டும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். ஆனால், 3வது ஓவரை வீசிய வாஷிங்டன் சுழலில் ராபின் உத்தப்பா சிக்கினார். அவர் 11 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 15 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் தமிழக வீரர் நடராஜன் பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் தனது மிடில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால், 36 ரன்களுக்கு சென்னை 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர், மொயின் அலியும், அம்பத்தி ராயுடுவும் ஜோடி சேர்ந்தனர்.




இவர்கள் இருவரும் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினர். இதனால், சென்னை அணி 12 ஓவர்களில் 84 ரன்கள் எடுத்தது. 12வது ஓவருக்கு பின்னர் மொயின் அலி அதிரடியாக ஆட தொடங்கினார். ஆனால், மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்ட அம்பத்தி ராயுடு 27 பந்தில் அவுட்டானார். 14 ஓவர்களின் முடிவில் சென்னை 100 ரன்களை எட்டியது. மார்க்ரம் வீசிய 15வது ஓவரில் சிக்ஸர் விளாசிய மொயின் அலி அடுத்த பந்திலும் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.


அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் இளம் அதிரடி வீரர் ஷிவம் துபே 3 ரன்களில் நடராஜன் பந்தில் அவுட்டானார். 16 ஓவர்களில் சென்னை 113 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்தது. இதையடுத்து, தோனி – ஜடேஜா ஜோடி சேர்ந்தனர்.  கடைசி 3 ஓவர்களில் சென்னை அணி அதிரடி காட்டும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அறிமுக வீரர் யான்சென் பந்தில் தோனி கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதையடுத்து, ப்ராவோவும், ஜடேஜாவும் சேர்ந்தனர்.




நடராஜனின் 19வது ஓவரின் கடைசி இரு பந்தில் ஜடேஜா பவுண்டரி, சிக்ஸர் அடித்தார். கடைசி ஓவரில் அதிரடி காட்ட முயன்ற ஜடேஜா 15 பந்தில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை அணி கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் எடுத்தது. நடராஜன், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண