CSK vs RCB LIVE SCORE : சென்னை அணியை வீழ்த்தியது பெங்களூர்..! 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!
IPL CSK vs PBKS : சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கட்டாய வெற்றியை நோக்கி இன்று களமிறங்குகின்றன.
ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முக்கியமான ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை அணியின் கடைசி நம்பிக்கை கேப்டன் தோனி ஹேசில்வுட் வீசிய 19வது ஓவரில் 1 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினார்.
சென்னை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆடிக்கொண்டிருந்த மொயின் அலி ஹர்ஷல் படேல் பந்தில் அவுட்டாகினார். அவர் 27 பந்தில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பெங்களூர் அணி நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் சென்னை அணிக்கு 23 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் அம்பத்தி ராயுடு மேக்ஸ்வெல் பந்தில் 10 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இதனால், சென்னை அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ராபின் உத்தப்பா மேக்ஸ்வெல் பந்தில் 1 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஷபாஸ் அகமது பந்தில் 23 பந்தில் 28 ரன்களுக்கு அவுட்டானார்.
சென்னை அணியின் தொடக்க வீரர்கள் டேவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டத்தால் சென்னை பவர்ப்ளே முடிவில் 51 ரன்களை எடுத்துள்ளது.
பெங்களூர் அணி நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் சென்னை அணி 4 ஓவர்களில் 25 ரன்களை எடுத்துள்ளது.
சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு பெங்களூர் அணி 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 17 பந்தில் 27 ரன்களை விளாசினார்.
பெங்களூர் அணி முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்த நிலையில், மஹிபால் லோம்ராரின் அதிரடியால் பெங்களூர் அணி 18 ஓவர்களில் 155 ரன்களை எடுத்துள்ளது. களத்தில் லோம்ராரும், தினேஷ்கார்த்திக்கும் உள்ளனர்.
பெங்களூர் அணி 3 விக்கெட்டுகளை இழந்தாலும் 14வது ஓவரில் 100 ரன்களை கடந்துள்ளது. ரஜத் மற்றும் லோம்ரோர் அதிரடியாக ஆடி வருகின்றனர்.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி மொயின் அலி பந்தில் போல்டானார். அவர் 30 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
பெங்களூர் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமாகிய பாப் டுப்ளிசிஸ் 38 ரன்களில் அவுட்டாகினார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் மேக்ஸ்வெல் 3 ரன்களில் ரன் அவுட்டானார்.
சென்னை அணிக்கு எதிராக பெங்களூர் அணி பவர்ப்ளேவில் 57 ரன்கள் விளாசி அசத்தியுள்ளது. டுப்ளிசிசும், விராட்கோலியும் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி வருகின்றனர்.
சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் பெங்களூர் அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதன்படி, பெங்களூர் அணி பேட்டிங் செய்ய உள்ளது.
Background
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்ட உடன் சென்னை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
இந்நிலையில் இன்று அதேபோல் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். சிஎஸ்கே அணி 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியை மட்டும் பெற்றுள்ளது. ஆகவே இனிவரும் அனைத்து போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற முடியும். எனவே சிஎஸ்கே அணி தீவிரமாக முயற்சி செய்யும் என்று கருதப்படுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பொறுத்தவரை தற்போது வரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே அடுத்து வர உள்ள 4 போட்டிகளில் 3ல் ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு மிகவும் பிரகாசம் அடைந்துவிடும். ஏனென்றால் கடைசியாக நடைபெற்ற 3 போட்டிகளில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்தது. இதன்காரணமாக அந்த அணியின் ரன் ரேட் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது. ஆகவே எஞ்சிய போட்டிகளில் ஆர்சிபி அணி நல்ல ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால் கடைசி கட்டத்தில் அந்த அணிக்கு பலமாக அமையும்.
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை இன்னும் ஆர்சிபி, மும்பை,டெல்லி, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் எஞ்சியுள்ளன. இவற்றில் அனைத்து போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவிற்காக காத்திருக்க வேண்டும். கடந்தப் போட்டியில் தோனி மீண்டும் அணிக்கு கேப்டனாக திரும்பியுள்ளது அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
அத்துடன் கடந்த போட்டியில் டேவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு கடந்தப் போட்டியில் 182 ரன்கள் விளாசியிருந்தனர். அதேபோல் இந்தப் போட்டியிலும் சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -