நரைன் டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என ஆண்ட்ரோ ரஸல் கூறியுள்ளார்.


ஐ.பி.எல் 2024:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 21) குவாலிபயர் போட்டி 1 நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.


அசத்தும் சுனில் நரைன்:


முன்னதாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுனில் நரைன் இந்த சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் 13 போட்டிகள் விளையாடி உள்ள அவர் 482 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்கள் அடங்கும். பந்து வீச்சை பொறுத்தவரை 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.


இச்சூழலில் தான் 2024 டி 20 உலகக் கோப்பைக்காக ஓய்வில் இருந்து சுனில் நரைன் விலக வேண்டும் என்ற வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


நீங்க வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடனும்:


இந்நிலையில் தான் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் சுனில் நரைனுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள ரஸல், “நரைன் டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.


இரண்டு வாரங்கள் நானும் ரதர்ஃபோர்டும் தொடர்ந்து நரைன் உடன் பேசிக்கொண்டிந்தோம்.  'ஏய் ப்ளீஸ், ஜஸ்ட். இந்த உலகக் கோப்பையில் நீங்கள் விளையாடுங்கள் அதற்கு பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் என்றேன்.


அவர் ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று நான் நினைக்கிறேன், அவருடைய முடிவையும் நான் மதிக்கிறேன். அவர் முடிவை மாற்றினால், வெஸ்ட் இண்டீஸ் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும்" என்று கூறியுள்ளார் ஆண்ட்ரோ ரஸல்.


முன்னதாக டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் இதுவரை இரண்டு முறை கோப்பையை வென்றிருக்கிறது. முதல் முறையாக கடந்த 2012 ஆம் ஆண்டு கோப்பையை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. இரண்டாவது முறையாக 2016 ஆம் ஆண்டு இந்தியவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.



2024 டி20 உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:


ரோவ்மேன் பவல் (கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரோன் ஹெட்மியர் , ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகேல் ஹோசைன், அல்ஜாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ரோமரியோ ஷெப்பர்ட்.