IPL2023 SRH vs RR LIVE Score: பேட்டிங் பவுலிங்கில் அசத்திய ராஜஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி..!
SRH vs RR IPL 2023 LIVE Score Updates: சன்ரைசஸ் ஹைதரபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
20 ஓவர்கள் முடிவில் ஹைதரபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சிறப்பாக ஆடிவந்த ரஷித் தனது விக்கெட்டை இழந்தார்.
13 ஓவர்கள் முடிவில் ஹைதரபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
12 ஓவர்களில் ஹைர்தரபாத் அணி 63 -6.
நிதானமாக ஆடி வந்த மயங்க் அகர்வால் தனது விக்கெட்டை இழந்தார். 11 ஓவர்கள் முடிவில் ஹைதரபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் ஹைதரபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் சேர்த்துள்ளது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள்ளை இழந்து வரும் ஹைதரபாத் அணி தனது ஐந்தாவது விக்கெட்டையும் இழந்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் ஹைதரபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் சேர்ர்த்துள்ளது.
ஏற்கனவே தடுமாறி வந்த ஹைதரபாத் அணி மீண்டும் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் ஒரு ரன் மட்டும் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.
8 ஓவர்கள் முடிவில் ஹைதரபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது.
6 ஓவர்கள் முடிவில் ஹைதரபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் சேர்த்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் ஹைதரபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் சேர்த்துள்ளது.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால், நிதானமாக ஆடி வரும் ஹைதரபாத அணி 4 ஒவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் சேர்த்துள்ளது.
3 ஓவர்கள் முடிவில் ஹைதரபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 12 ரன்கள் சேர்த்துள்ளது.
2 ஓவர்கள் முடிவில் ஹைதரபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 7 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்த சீசனின் முதல் மெய்டன் ஓவரை ராஜஸ்தான் அணியின் போட் வீசியுள்ளார். ஹைதரபாத் அணி இந்த ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.
முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் ஹைதரபாத் மீண்டும் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
ரன் கணக்கை தொடங்கும் முன்னரே ஹைதரபாத் அணி விக்கெட்டை இழந்துள்ளது.
ஹைதராபாத் அணிக்கு 204 ரன்கள் டார்கெட் நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் அணி
சிறப்பாக ஆடிவந்த சஞ்சு சாம்சன் 32 பந்தில் 55 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆகியுள்ளார்.
17 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்துள்ளது.
சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் 28 பந்தில் அரைசதம் விளாசியுள்ளார்.
17வது ஓவரின் முதல் பந்தில் ப்ராஹ் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
16 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களைச் சேர்த்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் ராஜ்ஸ்தான அணி 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் குவித்துள்ளது.
15 ஓவரின் முதல் பந்தில் தேவ்தத் படிக்கல் உம்ரான் கான் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
14 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 151 -2.
13 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை ஃபரூக்கிடம் இழந்து வெளியேறினார்.
நிதானமாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 50 ரன்கள் குவித்துள்ளார். 12 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் குவித்துள்ளது.
11 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் ராஜ்ஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 110 ரன்கள் சேர்த்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 105 ரன்கள் குவித்துள்ளது.
விக்கெட் விழுந்தாலும் அதிரடியைக் குறைக்காத ராஜஸ்தான் அணி 7.4 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்துள்ளது.
7 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 93 ரன்கள் சேர்த்துள்ளது.
ப்வர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் பட்லர் அதிரடியாக அரைசதம் விளாசிய நிலையில், அவுட் ஆகியுள்ளார்.
5 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் சேர்த்துள்ளது.
4 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடிவரும் ராஜஸ்தான் அணி 3.4 ஓவரில் 50 ரன்களை குவித்துள்ளது.
நான்காவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் பட்லர் சிக்ஸருக்கு பறக்கவிட்டு அதகளப் படுத்தியுள்ளார்.
மூன்று ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்த போட்டியின் முதல் சிக்ஸரை ஜோஸ் பட்லர் மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் 81 மீட்டருக்கு பறக்கவிட்டுள்ளார்.
2வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் சேர்த்துள்ளது.
தான் கேப்டனாக அறிமுகமாகும் முதல் போட்டியிலேயே ஹைதரபாத் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார் டாஸை வென்று பந்து வீச முடிவு செய்துள்ளார்.
Background
16வது ஐபிஎல் தொடரின் 4வது ஆட்டத்தில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் மைதான நிலவரம், ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தகூடிய வீரர்கள் விவரங்கள் பற்றி காணலாம்.
நடப்பாண்டுக்கான 16வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலகமாக தொடங்கியது. இதில் இன்று நடக்கும் 2 ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டியானது மாலை 3.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடக்கிறது. போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் மற்றும் ஜியோ சினிமா செயலியிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மைதானம் புள்ளி விபரம்
கிட்டத்தட்ட நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் போட்டியானது நடைபெறுகிறது. சொந்த மண்ணில் ஹைதராபாத் அணி அசைக்க முடியாத அளவுக்கு அபார சாதனை படைத்துள்ளது. அந்த அணி இங்கு விளையாடிய 44 போட்டிகளில் 29 போட்டிகளில் வெற்றியும், 14 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது.அதேமயம் ராஜஸ்தான் அணி இந்த மைதானத்தில் விளையாடிய ஆறு போட்டிகளில் இரண்டில் வெற்றியும், நான்கில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்த மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை விட (7.75) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (8.08) சிறந்த சராசரி ரன் ரேட்டைக் கொண்டுள்ளது.
இந்த மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரராக முன்னாள் ஹைதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் (1602 ரன்கள்) திகழ்கிறார். அதேபோல் பந்துவீச்சில் ஹைதராபாத் அணி வீரர் புவனேஸ்வர் குமார் (37) அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹைதராபாத் அணியின் உள்ளூர் மைதானமாக ராஜீவ் காந்தி மைதானத்தில் ராஜஸ்தானுடன் விளையாடிய 3 போட்டிகளிலும் ஹைதராபாத் அணியே வெற்றி பெற்றுள்ளது கூடுதல் பலமாக உள்ளது.
அணியின் உத்தேச வீரர்கள் விவரம்:
ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மேயர், ரியான் பராக், ஆகாஷ் வசிஷ்ட், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், அஸ்வினும், ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் (கேப்டன்), அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஹாரி புரூக், கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், அகேல் ஹூசைன், உம்ரான் மாலிக், நடராஜன் இடம் பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்கள் யார்?
ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் விதியை இரு அணிகளும் நன்றாக பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடி வருவதால் இன்றைய போட்டியில் புவனேஸ்வர் குமார் அணியை வழி நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணி பந்துவீசும் போது ஃபசல்ஹக் ஃபரூக்கி அல்லது லெக்ஸ்பின்னர் அடில் ரஷித் ஆகியோரை தேர்வு செய்யலாம். அதேபோல் பேட் செய்யும் போது அபிஷேக் ஷர்மாவை கூடுதல் பேட்ஸ்மேனாக அணியில் சேர்த்துக் கொள்ளும்.
இதேபோல் ராஜஸ்தான் அணியில் ஆகாஷ் வசிஷ்ட் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் சுழற்பந்து வீச்சையும் மேற்கொள்வார் என்பதால் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தால் இவர் பேட்டிங்கில் களமிறக்கப்படலாம். அதேசமயம் பந்துவீச்சில் குல்தீப் சென், நவ்தீப் சைனி மற்றும் சந்தீப் ஆகியோர் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக தேர்வு செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சீசனில் ஏற்பட்ட தோல்விக்கு ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை பழிவாங்க முயற்சிக்கும் என்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக செல்லும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -