நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.


நடப்பு தொடரில் இதுவரை:


நடப்பு சீசனை பொறுத்தவரை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியை கண்டுள்ளது. அதேசமயம் பஞ்சாப் அணி முதல் ஆட்டத்தில் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 5  ரன்கள் வித்தியாசத்திலும் வென்றது.  இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றிக்காக பஞ்சாப் அணியும் , ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய  ஐதராபாத் அணியும் முயலும் என்பதால் இப்போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்


மயங்க் அகர்வால், ஹாரி புரூக், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கேட்ச்), ஹென்ரிச் கிளாசென்(வ), வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன்


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இம்பேக்ட் வீரர்கள்


கிலின் ப்ளிப்ஸ், அகேல் ஹூசைன், உபன்ரா யாதவ், அப்துல் சமாத்


பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்


ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், சாம் குர்ரான், நாதன் எல்லிஸ், மோஹித் ரதீ, ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்


பஞ்சாப் கிங்ஸ் அணியின் இம்பேக்ட் வீரர்கள்


ஷிகிந்தர் ரசா, ரபாடா, ஹர்ப்ரீத் சிங், ரிஷி தவான், அதர்வா டைடி