SRH vs RR IPL: இஷான் கிஷன் அதிரடி சதம் - சன் ரைசர்ஸின் சரவெடி ரெக்கார்டு!

SRH vs RR IPL: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிக்கு இடையே நடந்தது.

Continues below advertisement

ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் பவர்ப்ளேயில் அதிக ரன் எடுத்தது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (Sunrisers Hyderabad (SRH)).

Continues below advertisement

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே மிரட்டலாக விளையாடியது. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன் எடுத்திருந்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் பவர்ப்ளேயில் அதிக ரன் எடுத்தது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (Sunrisers Hyderabad (SRH)).

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே மிரட்டலாக விளையாடியது. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன் எடுத்திருந்தது.

பவர் ப்ளேயில் அதிக ரன்கள் எடுத்த அணி

இந்தப் போட்டியில் பவர் ப்ளேயில் அதிக ரன்கள் எடுத்த 5-வது அணி என்ற ரெக்கார்ட் படைத்தது சன் ரைசர்ஸ் அணி. 

அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் மிரட்டல் பேட்டிங்கில் 19 பந்துகளுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. பவர் ப்ளேயில் 6 ஓவர்கள் முடிவில் 94 ரன்கள் எடுத்திருந்தது அணி. 

அணி விவரம் -  பவர்ப்ளே ஸ்கோர்   

SRH --- 125/0 -  DC /2024

SRH ----    107/0-  LSG / 2024

KKR -----   105/0 - RCB/ 2017

CSK -----   100/2  - PBKS /2014

SRH----       94/1 RR / 2025

2024-ம் ஐ.பி.எல். போட்டியில் ஹைதராபாத் அணி டெல்லி அணிக்கு எதிரான பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 125 ரன் எடுத்து சாதனை படைத்தது. 

அதிக ரன் எடுத்த அணிகள் (Highest Team Scores in IPL History)

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி 286 ரன்கள் எடுத்ததன் மூலம் இரண்டாவது முறையான அதிக ரன்களை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் 2024ம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக 287/3 ரன் அதிகப்ட்சமாகும். இந்தப் பட்டியலில் முதல் மூன்று  இடங்கள் சன்ரைசர்ஸ் அணியே உள்ளது. நான்காவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 272/7 இருக்கிறது.

இஷான் கிஷான் சதம்:

அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன், 45 பந்துகளில் சதம் அடித்தார். இந்த இன்னிங்ஸில் 11 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிக ரன்களை கொடுத்தார். 

அதிக ரன் கொடுத்த பந்துவீச்சாளர்

ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிக ரன் கொடுத்த பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 

  • 0/76 - ஜோஃப்ரா ஆர்ச்சர்  (RR) vs SRH, ஹைதராபாத்,2025* 
  • 0/73 - மோஹித் ஷர்மா (GT) vs DC, டெல்லி, 2024
  •  0/70 - பேசில் தம்பி (SRH) vs RCB, பெங்களூர், 2018
  •  0/69 - யாஷ் தயாள் (GT) vs KKR, அகமதாபாத்,  2023 
  • 1/68 - Reece Topley (RCB) vs SRH,பெங்களூரு, 2024 
  • 1/68 - Luke Wood (MI) vs DC, டெல்லி, 2024

 

Continues below advertisement