IPL SRH vs RR 2025: இன்று ஹைதரபாத்தில் நடந்து வரும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இன்று ஆடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

ஹெட் ரன்மழை:

சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டதால் கேப்டனாக களமிறங்கிய ரியான் பராக் பந்துவீச்சை ஏன் தேர்வு செய்தோம்? என்ற அளவிற்கு அவர்களது பந்துவீச்சு இருந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலே தனது அதிரடியை தொடங்கினார் அபிஷேக் சர்மா. அவருடன் இணைந்து மறுமுனையில் டிராவிஸ் ஹெட் ரன்மழை பொழிந்தார். 

ஃபரூக்கி, தீக்ஷனா, ஆர்ச்சர், சந்தீப்சர்மா என யார் வீசினாலும் ரன்மழை பொழிந்தனர் இந்த ஜோடி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருந்ததும் அவர்களுக்கு சாதகமாக இருந்தது. பவுண்டரிகளாக விளாசிய அபிஷேக் சர்மா 11 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 

சிக்ஸர் மழை:

அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் - இஷான் கிஷன் ஜோடி ஹைதரபாத் அணிக்கு சோதனையாக அமைந்தது. யார் பந்துவீசினாலும் பவுண்டரி, சிக்ஸர் என மாறி, மாறி வீசினாலும் இந்த ஜோடி ரன்மழை பொழிந்தது. இதனால், 7வது ஓவரிேல சன்ரைசர்ஸ் 100 ரன்களை கடந்தது. 

அபாரமாக ஆடிய டிராவிஸ் ஹெட் அரைசதம் விளாசினார். அவர் அரைசதம் விளாசிய சிறிது நேரத்திலே அவரை துஷார் தேஷ்பாண்டே அவுட்டாக்கினார். அவரது பந்துவீச்சில் 31 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 67 ரன்கள் எடுத்த ஹெட் அவுட்டானார். 

ஜெட் வேகத்தில் ஏறிய ரன்கள்:

அதன்பின்னர், இஷான் கிஷான் தனி ஆளாக ரன்மழை பொழிந்தார். அரைசதம்  கடந்த கிஷான் தொடர்ந்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும்  விளாசினார். இதனால் 14வது ஓவரிலே சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களை கடந்தது. அந்த இஷான் கிஷனுக்கு ஒத்துழைப்பு தந்த நிதிஷ் ரெட்டி 30 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த கிளாசென் பவுண்டரிகளாக விளாசினார். 

45 பந்துகளில் சதம்:

தொடர்ந்து ஜெட் வேகத்தில் சென்ற சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி பரூக்கி,தீக்ஷனா, ஆர்ச்சர், சந்தீப்சர்மா, துஷார் தேஷ்பாண்டே என யார் வீசினாலும் ரன்மழை பொழிந்தனர். குறிப்பாக, ஆர்ச்சர் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதனால், 250 ரன்களை சன்ரைசர்ஸ் அணி கடந்தது. களமிறங்கியது முதலே அதிரடி காட்டிய இஷான் கிஷன் 45 பந்துகளில் சதம் விளாசினார்.

287 ரன்கள் டார்கெட்: 

இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 286 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 ரன்களை எக்ஸ்ட்ராவாக வழங்கியது. இஷான் கிஷன் இறுதிவரை அவுட்டாகாமல் 47 பந்துகளில் 11 பவுண்டரி 6 சிக்ஸருடன் 106 ரன்கள் எடுத்தார்.  ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் மிகவும் மோசமாக பந்துவீசி 4 ஓவர்களில் 76 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 287 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்குகிறது. 

சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த முதல் அணி என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளது. அதேபோல, இரண்டாவது அதிகபட்ச ரன் என்ற பெருமையும் சன்ரைசர்ஸ் வசமே உள்ளது.