2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. சென்னை அணி கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து நான்காவது முறையாக கோப்பையை வென்ற சென்னை அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து ஒரு வாழ்த்து செய்தி பதிவிடப்பட்டிருந்தது. அதில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சேர்ந்து ஐபிஎல் கோப்பையை வென்ற நெகிடிக்கு வாழ்த்துகள்" எனப் பதிவிடப்பட்டிருந்தது. இதற்கு மற்றொரு தென்னாப்பிரிக்க வீரர் டூபிளசிஸ்,"உண்மையாக வா?" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் ஒரு பதிலை செய்துள்ளார்.




அதில்,"இந்த கணக்கை யார் நிர்வாகித்து வருகிறார்? ஏனென்றால் , தென்னாப்பிரிக்கா அணியிலிருந்து தற்போது வரை டூபிளசிஸ் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய இருவரும் ஓய்வு பெறவில்லை. அவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட்  அணிக்கு பல முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளனர். அப்படி இருக்கும் போது அவர்களுடைய பெயரை குறிப்பிடாமல் வாழ்த்து சொல்வது மிகவும் வருந்தத்தக்கது" எனப் பதிவிட்டுள்ளார். 


 






நான்காவது முறையாக கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த லூங்கி நெகிடி, இம்ரான் தாஹிர் மற்றும் டூபிளசிஸ் ஆகிய மூன்று பேர் உள்ளனர். அப்படி இருக்கும் போது அவர்கள் இருவரை விடுத்து நெகிடியை மட்டும் குறிப்பிட்டு எதற்காக தென்னாப்பிரிக்கா அணி வாழ்த்து கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க:‛அடுத்த ஏலத்தில் தான் தெரியும்...’ தோனி சொன்ன சூசகம்... அணி மாறுகிறாரா?