ஐ.பி.எல்-ல் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தான் விளையாடிய முதல் போட்டிகளில் அரைசதம் விளாசி அசத்தி இருக்கிறார் சஞ்சு சாம்சன்.
சஞ்சு சாம்சன் செய்த சாதனை:
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் அறிமுகமானார். பின்னர் 2018 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
. அந்த வகையில் ஷேன் வார்ன், வாட்சன், ராகுல் ட் ராவிட், ஸ்டீவன் சுமித், அஜிங்க்யா ரஹானே ஆகியோர் கேப்டன் பொறுப்பில் இருந்து வழிநடத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கேப்டன் பொறுப்பில் இருந்து வழி நடத்தி வருகிறார் சஞ்சு சாம்சன். இந்திய அணியில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்,
முதல் போட்டிகளில் அரைசதம்:
இந்நிலையில் தான் சஞ்சு சாம்சன் ஒரு சாதனை படைத்திருக்கிறார். அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தான் விளையாடிய முதல் போட்டிகளில் அரைசதம் விளாசி இருகிறார். அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 32 பந்துகளில் 74 ரன்களை குவித்தார்.
அதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 63 பந்துகளில் 119 ரன்களை விளாசி சதம் அடித்தார்.
2022 ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 27 பந்துகளில் 55 ரன்களை எடுத்தார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் 52 ரன்களை குவித்தார்.
இந்நிலையில் தான் இந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்களை குவித்து இருக்கிறார் சஞ்சு சாம்சன். இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது ராஜஸ்தான் ராயல் அணி. அந்த வகையில் வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது இந்த சீசனை ராஜஸ்தான் அணி.
மேலும் படிக்க: RR Vs LSG Innings Highlights: சரவெடியாய் வெடித்த சஞ்சு சாம்சன் - லக்னோவிற்கு 194 ரன்கள் இலக்கு!
மேலும் படிக்க: IPL 2024: கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐ.பி.எல் பேட்டர்கள்... ஆதிக்கம் செலுத்திய கோலி! அடுத்த இடத்தில் யார்?