இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ச் அணிக்கு 194 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. 


ஐ.பி.எல் 2024:


ஐ.பி.எல் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்   இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இதனிடையே புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தில் இருக்கிறது. 


இந்நிலையில் தான் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள்விளையாட்டு அரங்கத்தில் 4வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணி மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.


அரைசதம் விளாசிய சஞ்சு சாம்சன்:


இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த வகையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்சால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் 12 பந்துகள் களத்தில் நின்ற ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 24 ரன்களை குவித்தார். அதேபோல் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் 9 பந்துகள் களத்தில் நின்று  2 பவுண்டரிகள் விளாசி 11 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் களம் இறங்கினார்.  அவருடன் ரியான் பராக் ஜோடி சேர்ந்தார்.


 






அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் விளாசி அரைசதத்தை பதிவு செய்தார். அந்த வகையில் ஐ.பி.எல் தொடரில் தன்னுடைய முதல் போட்டியில் 2020, 2021,2022,2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் அரைசதம் விளாசி இருக்கிறார் சஞ்சு சாம்சன். இதனிடையே ரியான் பராக் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸ்கள் விளாசி மொத்தாம் 43 ரன்கள் எடுத்தார்.


194 ரன்கள் இலக்கு:


அப்போது லக்னோ அணி வீரர் நவீன் உல்-ஹக் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக களம் இறங்கிய ஷிம்ரோன் ஹெட்மியர் 7 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து நடையைக்கட்டினார்.  பின்னர் சஞ்சு சாம்சன் உடன் ஜோடி சேர்ந்தார் துருவ் ஜூரெல். அதன்படி 18 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்து விளையாடி வந்தது. இடையே முக்கியமான கேட்சுகளை லக்னோ அணி வீரர்கள் கோட்டை விட்டனர். 


அப்போது 42 பந்துகளில் 72 ரன்களுடன் களத்தில் நின்றார் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். 20 ஓவர் முடிவின் படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 193 ரன்கள் விளாசியது. இதில் சஞ்சு சாம்சன் கடைசி வரை களத்தில் நின்று 82 ரன்களை குவித்தார். 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாட உள்ளது.


 


மேலும் படிக்க: IPL 2024: கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐ.பி.எல் பேட்டர்கள்... ஆதிக்கம் செலுத்திய கோலி! அடுத்த இடத்தில் யார்?


மேலும் படிக்க:IPL 2024 RR vs LSG: ”திடீரென விழுந்த அந்த பொருள்”; பதறிய வீரரக்ள்; பாதியில் நிறுத்தப்பட்ட ராஜஸ்தான் - லக்னோ ஆட்டம்!