ஐ.பி.எல். தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை அணி முதன்முறையாக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்கியுள்ளது. இந்த தொடரில் சென்னை அணி சிறப்பாகவே ஆடி வருகிறது. புள்ளிப்பட்டியலில் சென்னை அணி தற்போது 3வது இடத்தில் உள்ளது.


ஒரு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் அசத்தி வருகிறார். இதுவரை அவர் இந்த தொடரில் கேப்டனாக செய்த சாதனைகளை கீழே காணலாம்.


அதிக ரன்கள்:


நடப்பு தொடரில் இதுவரை 9 போட்டிகளில் ஆடியுள்ள ருதுராஜ் கெய்க்வாட் 447 ரன்களை எடுத்துள்ளார். அதில் 1 சதம், 3 அரைசதங்கள் அடங்கும். ஒரு கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவராக தற்போது கெய்க்வாட் திகழ்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் சாம்சன் உள்ளார்.


அதிக சதம்:


நடப்பு தொடரில் சதம் விளாசிய ஒரே கேப்டனாக தற்போது வரை ருதுராஜ் கெய்க்வாட் உள்ளார். அவர் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 108 ரன்கள் விளாசினார். வீரர்களாக விராட் கோலி, டிராவிஸ் ஹெட், பட்லர், சுனில் நரைன் ஆகியோர் சதம் விளாசியுள்ளனர்.


தனிநபர் அதிகபட்சம்:


இந்த தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் விளாசிய கேப்டன் என்ற பெருமையும் ருதுராஜ் கெய்க்வாட் வசமே உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் இதுவரை 447 ரன்கள் குவித்திருப்பதுடன், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் 108 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது வரை இந்த தொடரில் ஒரு கேப்டன் விளாசிய தனிநபர் அதிகபட்சம் இதுவாகும்.


அதிக பவுண்டரிகள்:


நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிக பவுண்டரிகள் விளாசிய கேப்டன் என்ற பெருமையும் ருதுராஜ் வசமே உள்ளார். 9 போட்டிகளில் ஆடியுள்ள ருதுராஜ் இதுவரை 48 பவுண்டரிகள் விளாசியுள்ளார். வீரராகவும் அதிக பவுண்டரிகள் விளாசியவர்கள் பட்டியலில் ருதுராஜே உள்ளார்.


அதிக அரைசதங்கள்:


2024ம் ஆண்டிற்கான நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிக அரைசதங்கள் விளாசிய கேப்டன் என்ற பட்டியலில் 2வது இடத்தில் ருதுராஜ் உள்ளார். அவர் இதுவரை 3 அரைசதங்கள் விளாசியுள்ளார். கேப்டனாக இந்த தொடரில் அதிக அரைசதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் உள்ளார். அவர் 4 அரைசதங்கள் விளாசியுள்ளார்.


இது மட்டுமின்றி அறிமுக தொடரிலே அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சென்னை அணி சிறப்பாக ஆடி வருவதால், சி.எஸ்.கே. ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.