சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். மிக இளம் வீரரான கெய்க்வாட் அணியின் வெற்றிக்கு பங்களிப்பாரா? சவால்களை சமாளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஐ.பி.எல்.ரக கிரிக்கெட் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் பங்களிப்பு, சாதனைகள் பற்றிய ஓர் அலசல்.
புதிய கேப்டன்கள்:
ஐ.பி.எல். திருவிழா தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு மாதமும் கொண்டாட்டம்தான். 2008-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல். ஃபீவர் 17 ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த முறை கிரிக்கெட் ரசிகர்கள் ஜாம்பவான்களாக போற்றப்படும், மகேந்திர சிங் தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி யாருமே அவர்கள் விளையாடும் அணிகளில் கேப்டன் பொறுப்புகளில் இல்லை. இன்னும் சுவாரஸ்யமான தருணகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அடிப்படை விலைக்கு வாங்கப்பட்ட ருதுராஜ்:
ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை கொண்ட அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் ஜொலிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இவரின் ஐ.பி.எல். போட்டிகளின் பெர்பார்மன்ஸ் நன்றாகதான் இருக்கிறது. புனேவைச் சேர்ந்த இவர் 2006-ம் ஆண்டில் இருந்து மகாராஷ்டிரா கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். பின்னர், 2019-ல் இந்திய ஏ அணியில் இடம்பெற்றார்.
கெய்க்வாட்டை 2018-2019 ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. 2019- சீசன் முழுவதும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 2020-ம் ஆண்டில் அவருக்கு கொரோனா ஏற்பட்டதால் சில போட்டிகளில் பங்கேற்கவில்லை. கொரோனா சிகிச்சை முடிந்ததும், அந்த சீசனில் பங்கேற்ற 3 போட்டிகளிலும் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை.
- 2020- ஐ.பி.எல். சீசனில் 6 போட்டிகளில் விளையாடினார். மூன்று அரைசதம் அடித்தார்.
வலது கை பேட்ஸ்மேனான கெய்க்வாட் 6 போட்டிகளில் 204 ரன் எடுத்திருந்தார். - 2021-ல் 16 போட்டிகளில் 645 ரன், 2022- ஆண்டு சீசனில் 14 போட்டிகளில் விலையாடி 368 ரன், கடந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 590 ரன் என் இவருடைய பேட்டிங்க் பட்டியல் நல்ல ரெக்காட்களை வைத்துள்ளது.
- 2021-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் முதல் சதம் அடித்தார். 101 ரன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 4 அரைசதம் 64 4s, 23 சிக்ஸர் அடித்துள்ளார். அன்றைய சீசனில் 635 ரன் எடுத்து ஆரஞ்சு கேப் தன்வசப்படுத்தினார்.
- 2022, 2023 -ம் ஆண்டு சீசன்லின் ருத்ராஜ் சிறப்பாக விளையாடியுள்ளார். 2023- சீசனில் 30 சிக்ஸர்களுடன் 42.14 அவரேஜ் வைத்திருக்கிறார்.
- 2021-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதில் கெய்க்வாட் பங்கு பாரட்டிற்குரியது. அவருடைய ஆட்டம் அணிக்கு பலம் சேர்த்தது. 60 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 101 எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது ரசிகர்களை கொண்டாட வைத்தது.
ரெட் பந்து கிரிக்கெட், வெள்ளை பந்து கிரிக்கெட் என விளையாடும் அளவுக்கு ருதுராஜ் கெய்க்வாட் திறமையானவரே. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலும் தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக விளையாட கூடியவர். இந்த சீசனில் புதிதாக கேப்டன் பொறுப்பை எற்றுள்ளார். கேப்டனாக இருக்கும் சவாலை சமாளித்து ஜொலிப்பாரா என்பது போட்டிகளில் தெரிய வரும். அதோடு, இளம் வீரர் என்பதால் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாவும் சிறப்பாக திறமையை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே இருக்கிறது.