16வது சீஷன் ஐபிஎல் தொடரில் இன்று 66வது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் சஞ்சு சாம்சனின்  ராஜஸ்தான் அணியுடன் ஷிகர் தவானின் பஞ்சாப் அணி மோதுகிறது. இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறும் போட்டி இரு அணிகளுக்கும் இந்த சீசனில் கடைசி லீக் போட்டி என்பதால் கட்டாயம் இந்த போட்டியினை வெற்றியுடன் முடிக்க தீவிரமாக இருக்கிறார்கள். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அதன் ரன்ரேட் அதிகரிக்கும், அப்படி அதிகரிக்கும் ரன்ரேட் பெங்களூரு அணியை விட அதிகமாக இருந்தால் மட்டும் தான் ராஜஸ்தான் அணியால் ப்ளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்க முடியும். காரணம், பெங்களூரு அணி தனது இறுதி போட்டியான குஜராத்துடன் தோல்வியைச் சந்திக்க வேண்டும். அதேபோல் மும்பை அணி ஹைதராபாத் அணியிடம் தோல்வியைச் சந்திக்க வேண்டும். அப்போது தான் ராஜஸ்தான் அணியால் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இன்றைய போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்பதால் ராஜஸ்தான் அணி  அதன் முழு பலத்தினையும் வெளிக்காட்ட தீவிரமாக இருக்கும். 


அதேபோல் பஞ்சாப் அணியின் ப்ளேஆஃப் வாய்ப்பு என்பது டெல்லி அணியுடனான போட்டியில் தோல்வியைச் சந்தித்தபோதே கைநழுவிப் போய்விட்டது. இனி மற்ற அணிகளின் போட்டி முடிவுகளைப் பொறுத்து தான் வாய்ப்பு என்பது அமையும். ஆனால் அதற்கொல்லாம் போட்டியின் முடிவு வித்தியாசங்கள் மிகவும் அதிகமாக இருக்க வேண்டும். மேலும் இன்றைய போட்டியிலும் பஞ்சாப் அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் அதன் வெற்றியைப் பெறவேண்டும். அப்போது தான் பஞ்சாப் அணியால் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.  


ஐபிஎல் வரலாற்றினைப் பொறுத்தவரையில் இதுவரை இந்த இரு அணிகளும் 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. ஆனால் இதன் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது இரு அணிகளும் கிட்டத்தட்ட சரி பலத்துடன் தான் உள்ளன. 


இதுவரை நேருக்கு நேர்  - 25 முறை 


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி - 14 முறை வெற்றி பெற்றுள்ளது. 


பஞ்சாப் கிங்ஸ் அணி 11 முறை வெற்றி பெற்றுள்ளது. 


கடைசி ஐந்து போட்டிகளில் 


ராஜஸ்தான் ராயல்ஸ் - 3 முறை வெற்றி பெற்றுள்ளது. 


பஞ்சாப் கிங்ஸ்  - 2 முறை வெற்றி பெற்றுள்ளது. 


நேஉக்கு நேர் மோதிக்கொண்டதில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தும், இரண்டாவது பேட்டிங் செய்தும் தலா 7 முறை வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணியைப் பொறுத்தமட்ட்டில் முதலில் பேட்டிங் செய்து 8 முறையும் இரண்டாவது பேட்டிங் செய்து 3 முறையும் போட்டியை வென்றுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் தனது சதத்தினை பதிவு செய்துள்ளார். அதேபோல் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் பட்டேல் 14 விக்கெட்டுகள் ராஜஸ்தான் அணிக்கு எதிராக கைப்பற்றியுள்ளார்.