RR Vs RCB, IPL 2022 Live: 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஆர்சிபி !
RR Vs RCB, IPL 2022 Live: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள் !
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 29 ரன்களில் தோல்வி அடைந்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் குவித்துள்ளது.
15 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் ரன் அவுட்டாகியுள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 6 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
இரண்டு ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் விராட் கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி ஒரு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது.
டாப் ஆர்டர் பேட்டர்களின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த நிலையில், சில்வாவின் பந்துவீச்சில் சஞ்சு சாம்சன் பவுல்டாகி வெளியேறினார்
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முடிவில் ராஜஸ்தான் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஒரே ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி தன்வசம் வைத்துள்ளார். அவர் 2016ஆம் ஆண்டு தொடரில் 4 சதங்கள் விளாசியிருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லர் தற்போது வரை 3 சதங்கள் விளாசியுள்ளார். இன்று சதம் அடிக்கும் பட்சத்தில் அதை அவர் சமன் செய்வார்.
புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் ஆடி 5 போட்டியில் வெற்றி 2 தோல்விகளுடன் 3வது இடத்தில் உள்ளது.
புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ஆர்.சி.பி. 8 போட்டிகளில் ஆடி 5 வெற்றி 3 தோல்வியுடன் உள்ளது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஆர்சிபி அணி வெறும் 68 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து படு தோல்வி அடைந்தது.
Background
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. புனேவில் நடைபெறும் இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடர் தொடங்கியது முதலே ராஜஸ்தான் அணியும், பெங்களூர் அணியும் மிகவும் பலமான அணிகளாக விளங்கி வருகிறது.
ராஜஸ்தான் அணியை பொறுத்தமட்டில் ஜோஸ் பட்லர் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளார். அவர் இதுவரை 2 சதங்கள் அடித்து இந்த தொடருக்கான ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். அவருக்கு தேவ்தத் படிக்கல் தொடக்க வீரராக நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார். கடந்த போட்டியில் அவர் தனது பார்மை மீட்டார். கேப்டன் சஞ்சு சாம்சனும், ஹெட்மயரும் அதிரடியில் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேகத்தில் அசத்த ட்ரென்ட் போல்ட் மற்றும் பிரசித் கிருஷ்ணா உள்ளனர். அவர்களுக்கு ஓபெட் மெக்காய் ஒத்துழைப்பு அளிக்க உள்ளார். ராஜஸ்தான் அணியின் பலமாக யுஸ்வேந்திர சாஹல் உள்ளார். அவர் இந்த தொடரில் சுழலில் அசத்தி வருகிறார். தன்னுடைய முந்தைய அணியான பெங்களூருக்கு எதிராக அவர் இன்று களமிறங்குகிறார். அவருடன் சுழலில் அசத்த அஸ்வினும் உள்ளார்.
பெங்களூர் அணியை பொறுத்தவரை இந்த தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனாலும், கடந்த போட்டியில் 69 ரன்களில் சுருண்டது அந்த அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் அதில் இருந்து மீண்டு வந்து இந்த போட்டியில் பெங்களூர் அசத்தும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அந்த அணியின் கேப்டன் பாப் டுப்ளிசிஸ் தனது அதிரடியான பேட்டிங்கை இன்று அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -