Rajasthan Royals vs Royal Challengers Bangalore : தினேஷ் கார்த்திக் அதிரடியால் பெங்களூர் அணி அபார வெற்றி...! ராஜஸ்தானுக்கு முதல் தோல்வி..!
RR vs RCB Live Score: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே நடைபெறும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக சேசிங் செய்த பெங்களூர் அணி 5 பந்துகள் மீதம் வைத்து 170 ரன்கள் இலக்கை எட்டியது. தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 44 ரன்களுடனும், ஹர்ஷல் படேல் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பெங்களூர் அணிக்காக அதிரடி காட்டிய ஷாபாஸ் அகமது 26 பந்தில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார்.
பெங்களூர் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில 28 ரன்கள் தேவைப்படுகிறது. தினேஷ்கார்த்திக் 35 ரன்னுடனும், ஷபாஸ் 32 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
பெங்களூர் அணி 15 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் 31 ரன்களுடனும், ஷாபாஸ் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
அஸ்வின் வீசிய ஓவரில் தினேஷ் கார்த்திக் 4,6,4 என்று விளாசியதால் பெங்களூர் அணி 100 ரன்களை கடந்துள்ளது.
பெங்களூர் அணி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய நிலையில், அந்த அணியின் ரூதர்போர்டு 5 ரன்களில் ட்ரெண்ட் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.
பெங்களூர் அணியின் தூணாக விளங்கும் முன்னாள் கேப்டன் விராட்கோலி 5 ரன்களில் ரன் அவுட்டாகினார். இதனால் பெங்களூர் ரசிகர்கள் சோகம் அடைந்தனர். அதற்கு அடுத்த பந்திலே வில்லி போல்டாகி வெளியேறினார்.
170 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் பெங்களூர் அணி இரண்டாவது விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் ராவத் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பெங்களூர் அணிக்காக அதிரடியாக ஆடத்தொடங்கிய டுப்ளிசிஸ் 20 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் அவுட்டானார்.
பெங்களூர் அணிக்காக அதிரடியாக ஆடத்தொடங்கிய டுப்ளிசிஸ் 20 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் அவுட்டானார்.
பெங்களூர் அணிக்காக அதிரடியாக ஆடத்தொடங்கிய டுப்ளிசிஸ் 20 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் அவுட்டானார்.
பெங்களூர் அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை எடுத்துள்ளது. டுப்ளிசிஸ் 18 ரன்களுடனும், ராவத் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 170 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் பெங்களூர் அணி 3 ஓவர்களில் 27 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.
ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லரின் அதிரடியால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்துள்ளது.
பெங்களூர் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசியதால் 18 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதனால், கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் அணி மிகப்பெரிய ஸ்கோர்களை குவிக்குமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
17 ஓவர்கள் முடிந்துள்ளதால் ராஜஸ்தான் அணி வீரர்கள் பட்லரும், ஹெட்மயரும் அதிரடியாக ஆடி வருகின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியுள்ளது. ஹெட்மயரும், ஜோஸ் பட்லரும் களத்தில் உள்ளனர்.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ரிவியூவில் தப்பித்து ஹசரங்காவின் அடுத்த பந்திலே அவரிடம் மிகவும் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஆகாஷ் தீப் வீசிய பந்தில் ஜோஸ் பட்லர் கொடுத்த அற்புதமான கேட்ச் வாய்ப்பை வீரர் வில்லி நழுவவிட்டார். முன்னதாக, அதே ஓவரில் ஆகாஷ் தீீப்பும் கைக்கு வந்த ஜோஸ் பட்லர் அளித்த கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார்.
பெங்களூர் அணிக்கு எதிராக பேட் செய்து வரும் ராஜஸ்தான் அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணி முதல் விக்கெட்டை இழந்த பிறகு களமிறங்கிய தேவ்தத் படிக்கல் அதிரடியாக ஆடி வருகிறார். அவருக்கு பட்லர் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.
பெங்களூர் அணிக்கு எதிராக பேட் செய்து வரும் ராஜஸ்தான் அணி 3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்களை எடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆட்டத்தை தொடங்கிய ஜெய்ஷ்வால் 4 ரன்களில் வில்லி பந்தில் போல்டாகி வெளியேறினார்.
பெங்களூர் அணிக்கு எதிராக ராஜஸ்தானின் பேட்டிங்கை ஜோஸ் பட்லரும், ஜெய்ஷ்வாலும் தொடங்கியுள்ளனர்.
Background
IPL 2022, Match, RR vs RCB: மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த போட்டியில் 2 போட்டியில் ஆடி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராஜஸ்தான் அணியும், 2 போட்டியில் ஆடி 1 வெற்றி, 1 தோல்வியுடன் 7வது இடத்தில் உள்ள பெங்களூர் அணியும் தங்களது அடுத்த வெற்றிக்காக மோதுகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -