ஐ.பி.எல் 2024:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் உள்ள சுவாமி மன்சிங் மைதானத்தில் நடைபெற்று வரும் 19வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. அந்த வகையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கிடையில் டாஸ் போடுவதற்கு முன்பு சோலார் இன்ஜினியர் தவ்ரி தேவி என்ற பெண் சஞ்சு சாம்சனிடம் சோலார் விளக்கு ஒன்றை கொடுத்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது.


அரைசதம் எடுத்த விராட் கோலி:


இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் களம் இறங்கினார்கள். இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி பெங்களூரு அணிக்கு ரன்களை சேர்த்துக்கொடுத்தனர். அந்தவகையில், கோலி 39 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அரைசதத்தை பதிவு செய்தார். இந்த சீசனின் 5 வது போட்டியில் விராட் கோலியின் 3 வது அரைசதம் இது.





தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் ஜோடி 100 ரன்களை கடந்து விளையாடியது. இதனிடையே ஃபாஃப் டு பிளெசிஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் விக்கெட்டை எடுப்பதற்கு  14 ஓவர்கள் ராஜஸ்தான் அணிக்கு தேவைப்பட்டது. மொத்தம் 33 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 2சிக்ஸர்கள் உட்பட 44 ரன்கள் எடுத்தார். அப்போது மேக்ஸ்வெல் களம் இறங்கினார். மறுபுறம் விராட் கோலி களத்தில் நின்றார்.


 






 


மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் சவுரவ் சவுகான் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். 6 பந்துகள் களத்தில் நின்ற சவுரவ் சவுகான் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார்.  இதனிடையே 67 பந்துகளில் விராட் கோலி தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். ஐ.பி.எல் சீசன் அவர் எடுத்துள்ள 8 வது சதம் இது. 


 



 


இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 183 ரன்கள் எடுத்தது. இதில் கடைசி வரை களத்தில் நின்ற விராட் கோலி 72 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 113 ரன்கள் எடுத்தார். 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.