ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் 8வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டி ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக அசாம் கவுஹாத்தியில் உள்ள மைதானத்தில் நடத்தப்பட்டது.  இதில் டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச முடிவு செய்தார். 


இதன் படி பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை, அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் ப்ரப்சிம்ரன் தொடங்கினர். இருவரும் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடி வந்தனர். குறிப்பாக ப்ரப்சிம்ரன் மைதானத்தின் நாலாபுறாமும் பந்துகள் பவுண்டரி எல்லைகளை தொட்டபடின் இருந்தது. ராஜஸ்தான் அனியின் ஆஸ்தான பந்துவீச்சாளர்கள் எனப்படும் போல்ட், அஸ்வின், சஹால், ஹோல்டரின் ஓவர்களை ப்ரப்சிம்ரன் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அதகளப்படுத்தினார்.


ப்ரப்சிம்ரன் அரைசதம்


இதனால் அணியின் ஸ்கோர் ஐந்து ஓவர்களிலேயெ ஐம்பதைக் கடந்தது. அதனைத் தொடர்ந்து ப்ரப்சிம்ரன் 28 பந்தில் 50 ரன்களை எட்டினார்.  இவர்கள் கூட்டணியை பிரிக்க ராஜஸ்தான் அணியின் ஆஸ்தான பவுலரான போல்ட் டெத் ஓவரில் பந்து வீசுவதற்காக அவரிடம் கைவசம் இருந்த 2 ஓவர்களில் மீண்டும் ஒரு ஓவர் 10 ஓவர்களுக்குள் மீண்டும் பந்து வீச கொண்டுவரப்பட்டார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் 10வது ஓவரில் தான் ராஜஸ்தான் அணியால் ஒரு விக்கெட்டை வீழ்த்த முடிந்தது. சிறப்பாக விளையாடி வந்த ப்ரப்சிம்ரன் 34 பந்தில் 60 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை ஹோல்டரிடம் பறிகொடுத்து வெளியேறினார். அவர் அவுட் ஆகும்போது பஞ்சாப் அணியின் ஸ்கோர் 90 ரன்களாக இருந்தது. 


காயம் 


அதன் பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ராஜபக்சா ஒரு பந்தை எதிர்கொண்டு ஒரு ரன் எடுத்து இருந்தார். அதன் பின்னர் அவர் நான் - ஸ்டைரைக்கில் இருந்த போது ஷிகர் தவான் அடித்த பந்து ராஜபக்சாவின் வலது கையில் பலமாக பட வலியால் துடித்தார். இதனால் ஆடுகளத்தில் இருந்து அவர் உடனடியாக வெளியேறினார்.


இதன் பின்னர் தவானுடன் ஜிதேஷ் கைகோர்த்தார். இதன் பின்னர் ஆட்டத்தின் போக்கு அடுத்த இரண்டு ஓவர்கள் மட்டும் ராஜஸ்தான் கட்டுக்குள் இருந்தது, நிதானமாக ஆடிவந்த ஷிகர் தவான் அடித்து ஆட ஆரம்பித்தார். இதனால் 34 பந்தில் தனது அரைசத்தினை எட்டியவர், தொடர்ந்து அடித்து ஆடினார். இதனால் பஞ்சாப் அணியின் ரன்ரேட் மட்டும் 10க்கு குறையாமல் பார்த்துக் கொண்டனர். 15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டை இழந்து 152 ரன்கள் குவித்து இருந்தனர். 


அதன் பின்னர் ஜிதேஷ் தனது விக்கெட்டை இழக்க, அவருக்கு பின் வந்த ஷிகிந்தர் ரசா வந்த வேகத்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதனால் ரன்ரேட் சற்று குறைந்தது. அதன் பின்னர் களத்துக்கு ஷாருக்கான் வந்தார். அவர் ஷிகர் தவானுக்கு ஒத்துழைப்பு கொடுக்க, பந்துகளை பவுண்டரிக்கு விரட்டும் பணியை தவான் சிறப்பாக செய்தார். 


இறுதியில் பஞ்சாப் அணி 4விக்கெட்டுகளை இழந்து 197ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 56 பந்தில் 86 ரன்கள் குவித்து இருந்தார். ராஜஸ்தான் அணி சார்பில் அஸ்வின், சஹால் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஹோல்டர் இரண்டு விக்கெட்டுகள் விழ்த்தி இருந்தார்.