ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 58வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றனர். முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. 


அதன் அடிப்படையில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர். இந்த தொடரில் அதிக ரன் குவித்து ஆரஞ்சு கப்பை கைப்பற்றி இருந்த பட்லர், சக்காரியா வீசிய 3 வது ஓவரில் தாகூரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 






அதன்பிறகு, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் 3 வதாக அஷ்வின் களமிறங்கி அரைசதம் அடித்து அசத்தினார். ஜெய்ஸ்வால் 19 ரன்கள் எடுத்து அவுட் ஆக, பின்னால் வந்த பட்டிக்கல் தன் பங்கிற்கு 48 ரன்கள் அடித்து அரைசதம் அடிக்காமல் வெளியேறினார். 


அடுத்துவந்த பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க எண்களில் ஏமாற்றம் அளிக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி நேரத்தில் ரன் எடுக்க தடுமாறியது. கடைசி ஓவர் வீசிய தாகூர், அந்த ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் அடித்தது. 


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகப்பட்சமாக அஷ்வின் 50 ரன்களும், பட்டிக்கல் 48 ரன்களும் எடுத்து இருந்தனர். டெல்லி அணி சார்பில் சக்காரியா, அன்ரிச் நார்ட்ஜே, மிட்சல் மார்சல் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண