RR vs CSK, IPL 2023 LIVE: சிஎஸ்கேவை மீண்டும் வீழ்த்திய ராஜஸ்தான்.. 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

IPL 2023, Match 37, RR vs CSK: 37வது போட்டியில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்.

முகேஷ் Last Updated: 27 Apr 2023 11:16 PM
RR vs CSK, IPL 2023 LIVE: சிஎஸ்கேவை மீண்டும் வீழ்த்திய ராஜஸ்தான்.. 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 37வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

RR vs CSK, IPL 2023 LIVE: 8 ஓவர்களில் 59 ரன்கள்... அரைசதத்தை நெருங்கும் கெய்க்வாட்..!

8 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 59 ரன்கள் எடுத்துள்ளது. 

RR vs CSK, IPL 2023 LIVE: 5 ஓவர்கள் முடிவில் 35 ரன்களுடன் சென்னை அணி ..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்கள் முடிவில் 35 ரன்கள் எடுத்துள்ளது சென்னை அணி

RR vs CSK, IPL 2023 LIVE: 3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 13 ரன்கள்.. நிதானுடன் ருதுராஜ், கான்வே..!

203 ரன்களை நோக்கி களமிறங்கியுள்ள சென்னை அணி 3 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது. 

RR vs CSK, IPL 2023 LIVE: இறுதி கட்டத்தில் போட்டு பொளந்த ஜூரல், படிக்கல்.. சென்னை அணிக்கு 203 ரன்கள் இலக்கு!

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. 

RR vs CSK, IPL 2023 LIVE: அடுத்தடுத்து 2 விக்கெட்களை தூக்கிய துஷார் தேஷ்பாண்டே.. 3 விக்கெட்களை இழந்த ராஜஸ்தான்..!

ராஜஸ்தான் ராயல்ஸ் 125 ரன்களில் இருந்தபோது கேப்டன் சஞ்சு சாம்சன் 17 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து துஷார் தேஷ்பாண்டே பந்தில் கேட்சானார். தொடர்ந்து அதே ஓவரில் 43 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

RR vs CSK, IPL 2023 LIVE: 100 ரன்களை தொட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்... அதிரடி மழையில் ஜெய்ஸ்வால்..!

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் கடந்து விளையாடி வருகிறது. 

RR vs CSK, IPL 2023 LIVE: முதல் விக்கெட்டை இழந்த ராஜஸ்தான்.. வெளியேறிய பட்லர்..!

9வது ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் விக்கெட்டை இழந்தது. ஜோஸ் பட்லர் 21 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.மறுபுறம் ஜாஷ்வி ஜெய்ஸ்வால் 29 பந்துகளில் 53 ரன்களுடன் விளையாடி வருகிறார். 

RR vs CSK, IPL 2023 LIVE: 7 ஓவர்களில் 75 ரன்கள்... ஆதிக்கம் செலுத்தும் ராஜஸ்தான் ராயல்ஸ்..!

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ஓவர் முடிவில் 75 ரன்கள் எடுத்துள்ளது. 

RR vs CSK, IPL 2023 LIVE: 3 ஓவரில் 42 ரன்கள்.. கலக்கும் ஜெய்ஸ்வால், பட்லர்..!

மூன்றாவது ஓவரில் மொத்தம் 18 ரன்கள் வந்தது. ஆகாஷ் சிங்கின் இந்த ஓவரில் ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது 11 பந்துகளில் 31 ரன்களை எட்டியுள்ளார். மேலும் பட்லர் 8 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். மூன்று ஓவர்களில் ஸ்கோர் 42 ரன்கள்

RR vs CSK, IPL 2023 LIVE: ஆரம்பமே அதிரடி.. 2 ஓவர்களில் 24 ரன்கள் எடுத்த ராஜஸ்தான்..!

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ஓவர் முடிவில் 24 ரன்கள் எடுத்துள்ளது. 

RR vs CSK, IPL 2023 LIVE: முதல் 4 பந்தில் 3 பவுண்டரிகள்.. அடித்து விரட்டிய ஜெய்ஸ்வால்..!

ஆகாஷ் சிங் வீசிய முதல் ஓவரின் முதல் 4 பந்துகளில் ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகளை விரட்டியுள்ளார். 

RR vs CSK, IPL 2023 LIVE: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்..!

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா, ஆகாஷ் சிங்

RR vs CSK, IPL 2023 LIVE: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்..!

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

RR vs CSK, IPL 2023 LIVE: டாஸ் வென்ற பேட்டிங்கை தூக்கிய ராஜஸ்தான்... முதலில் பந்துவீசும் சென்னை..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

Background

ஐபிஎல் சீசன்:


16வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 35 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக 10 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.


இன்றைய போட்டி


ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல், 27) நடக்கவுள்ள 3வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மூன்றாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்தூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ள இந்த போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.


சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை


மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹோம் - அவே முறைப்படி போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதனால் அனைத்து போட்டிகளும் பெரும்பாலும் மைதானம் நிரம்பிய காட்சியாகத்தான் உள்ளது. ஆனால் சென்னை அணியைப் பொறுத்தவரையில் ஹோம் - அவே என்ற மாறுபாடே இல்லாமல், உள்ளது. தோனியின் கடைசி சீசன் என கூறப்படுவதால் சென்னை அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்திலும் சென்னை அணியின் ரசிகர்கள் மைதானத்தினை நிரப்பி விடுகின்றனர். ரசிகர்கள் மத்தியில்ன் இருந்து வரும் புத்துணர்ச்சி சென்னை அணிக்கு தனி உத்வேகத்தினை அளிக்கும் போல் தெரிகிறது. இந்த சீசனை தோல்வியோடு தொடங்கிய சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது. 5 போட்டிகளை வென்றுள்ள சென்னை அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி சந்தித்த இரண்டு தோல்விகளில் ஒன்று சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தானுக்கு எதிராகவும், மற்றொன்று நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத்துக்கு எதிராகவும் தான். மற்றபடி பலமான அணிகள் என கூறப்படும் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா அணிகளை அதன் சொந்த ஊரில் வைத்தே சென்னை அணி சம்பவம் செய்துள்ளது. 


ராஜஸ்தான் ராயல்ஸ்  இதுவரை 


ஐபிஎல் தொடரில் மிகவும் முக்கியமான அணியாக இருப்பது ராஜ்ஸ்தான் அணி. சஞ்சு சாம்சன் தலைமையிலான இந்த அணி மிகசசிறப்பான அணியாக உள்ளது. களமிறங்கும் 12 வீரர்களும் திறம்பட செயல்படுவதால் எதிரணிக்கு இவர்களை எதிர்கொள்வது மிகவும் சவாலான விசயாமாக உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணி 3இல் தோல்வியும் 4இல் வெற்றியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும், இன்று இந்த அணி எதிர்கொள்ளவுள்ள சென்னை அணியை அதன் சொந்த மைதானத்தில் வெற்றி கண்டுள்ள நம்பிக்கையில் ராஜஸ்தான் அணி இன்று களமிறங்கும் எனலாம். 


முதல் இடம்


இதில் சென்னை அணி ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதால், இந்த போட்டியில் சென்னை அணி வெல்லும் பட்சத்தில் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலேயே இருக்கும். ராஜஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறும். இன்று இரவு நடக்கும் போட்டி முதல் இடத்துக்கான போட்டியாகத் தான் உள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.