RR vs CSK LIVE Updates: சொதப்பிய சிஎஸ்கே, அசத்திய ராஜஸ்தான் ப்ளே ஆஃப் போட்டிக்கு முன்னேற்றம்!

RR vs CSK, IPL 2022 LIVE Updates: ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையேயான ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 20 May 2022 11:12 PM
அதிரடியாக ஆடும் ஜெய்ஷ்வால்..! சென்னை பந்துவீச்சு தடுமாற்றம்..!

சென்னை அணிக்கு எதிராக இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் அதிரடியாக ஆடி அசத்தி வருகிறார். 

அதிரடியாக ஆடும் ஜெய்ஷ்வால்..! சென்னை பந்துவீச்சு தடுமாற்றம்..!

சென்னை அணிக்கு எதிராக இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் அதிரடியாக ஆடி அசத்தி வருகிறார். 

2 ரன்களில் அவுட்டாகிய பட்லர்...!

சென்னை அணிக்கு எதிராக இலக்கை நோக்கி வரும் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்கள் இலக்கு..! கட்டுப்படுத்துமா சென்னை..?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி 150 ரன்களை எடுத்துள்ளதால் ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மொயின் அலி 93 ரன்களில் அவுட்...!

சென்னைக்காக சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மொயின் அலி 93 ரன்களில் ஆட்டமிழந்தார். 

சென்னை கேப்டன் தல தோனி அவுட்..! சதமடிப்பாரா மொயின் அலி..?

சென்னை அணிக்காக கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய தோனி 26 ரன்களில் அவுட்டாகினார். 

மொயின் அலி சதமடிப்பாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

சென்னை அணிக்காக அதிரடியாக ஆடி வரும் மொயின் அலி சதமடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். 

அதிரடிக்கு மாறிய தோனி - மொயின் அலி..!

சென்னை அணிக்காக நிதானம் காட்டிய மொயின் அலியும், கேப்டன் தோனியும் தற்போது அதிரடி ஆட்டத்திற்கு மாறி அதிரடியாக ஆடி வருகின்றனர். 

அடுத்தடுத்து விக்கெட்டுகள்..! நிதானம் காட்டும் தோனி - மொயின் அலி..!

சென்னை அணி வீரர்கள் பவர்ப்ளேவில் அதிரடியாக ஆடினாலும், அடுத்தடுத்து ராஜஸ்தான் சிறப்பாக பந்துவீசியதால் தற்போது சென்னை நிதானமாக ஆடி வருகிறது. கேப்டன் தோனி 6 ரன்களிலும், மொயின் அலி 76 ரன்களிலும் பேட் செய்து வருகின்றனர். 

அஸ்வின் சுழலில் அவுட்டாகிய கான்வே..! 2வது விக்கெட்டை இழந்த சென்னை..!

சென்னை அணியின் தொடக்க வீரர் டேவோன் கான்வே 14 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 16 ரன்கள் விளாசிய நிலையில் அஸ்வின் சுழலில் அவுட்டாகினார். 

19 பந்துகளில் 50 ரன்கள்...! ருத்ரதாண்டவம் ஆடும் மொயின் அலி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக ஆடி வரும் மொயின் அலி 19 பந்துகளில் 50 ரன்களை கடந்துள்ளார். 

மொயின் அலி அதிரடி..! 5 ஓவர்களில் சென்னை 49 ரன்கள்..!

சென்னை அணிக்காக ஒன் டவுன் வீரராக களமிறங்கியுள்ள மொயின் அலி அதிரடியாக ஆடி வருவதால் சென்னை அணி 5 ஓவர்களிலே 49 ரன்களை எடுத்துள்ளது.  

அடுத்தாண்டும் விளையாடுவேன் என்ற தோனி - சென்னை ரசிகர்கள் உற்சாகம்

சென்னை அணிக்காக டாஸ் வென்ற தோனி அடுத்தாண்டும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவேன் என்று கூறி சென்னை ரசிகர்ளை உற்சாகம் அடைய வைத்துள்ளார். 

1 ரன்னில் அவுட்டாகிய ருதுராஜ்..! சென்னைக்கு தொடக்கமே அதிர்ச்சி..!

சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ட்ரெண்ட் போல்ட் வீசிய பந்தில் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 

Background

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 68வது போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே வெளியேறிவிட்டதால், அவர்களுக்கு இந்த போட்டி சம்பிரதாய போட்டியாகவே அமையும். அதேசமயம் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மூன்றாவது அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம். 


இந்த தொடரில் பலமிகுந்த அணியாக வலம் வரும் ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்ய முனைப்பு காட்டும். இந்த போட்டியில் தோற்றாலும் ராஜஸ்தான் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு புள்ளிகள் மற்றும் ரன்ரேட் அடிப்படையில் சென்றுவிடும். அதேசமயத்தில் இந்த தொடரின் கடைசி போட்டி என்பதால் வெற்றியுடன் வெளியேற சென்னை அணி விரும்பும். இந்த தொடரில் தோனியின் கடைசி கேப்டன்சி போட்டி என்பதாலும் சென்னை ரசிகர்களுக்காக வெற்றி பெற சென்னை அணி விரும்பும். 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.