ரோகித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் உள்ளார். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இது வேறு எந்த அணிக்கும் இல்லாத ஒரு புகழாகவே உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. 


மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ரோகித் ஷர்மா,  தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்க காலம் முதல் தற்போது வரை கிரிக்கெட் பேட்டில் பல்வேறு நிறுவனங்களை முன்னிலைப்படுத்தியுள்ளார். எந்தவொரு வீரரின் சொத்து மதிப்பீட்டில்  பிராண்ட் ஒப்புதல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ரோகித் ஷர்மா பல்வேறு வகைகளின் சில பிராண்டுகளை முன்னிலைப் படுத்துகிறார். அதில் பேட் ஸ்பான்சர் ஒப்பந்தங்களும் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Rohit Sharma: அம்மாடியோவ்.. ரோகித் ஷர்மா பயன்படுத்தும் பேட்டினால் அவருக்கு கிடைக்கும் பணம் மட்டும் இவ்வளவா?


ரோகித் ஷர்மா தனது தொடக்க காலத்தில் குறிப்பாக 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக்கோப்பை போட்டியில் ரிபோக் நிறுவனத்தினை தனது கிரிக்கெட் பேட்டில் முன்னிலைப்படுத்தினார். அதன் பின்னரும் ரிபோக் நிறுவனத்தைத் தான் தனது பேட்டில் முன்னிலைப் படுத்தினார். முதலில் பேட்டில் கருப்பு நிறத்திலும், பின்னர் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் ரிபோக் என இடம் பெற்று இருந்தது. 


இதன் பின்னர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் எம்.ஆர்.எஃப் பிராண்டை முன்னிலைப்படுத்தும் வகையில் தனது பேட்டில் எம்.அர்.எஃப் பிராண்டை முன்னிலைப் படுத்தி விளையாடினார். 


இதற்குப் பின்னர் இவர் SS Ton பேட்டுடன் களமிறங்கினார். இந்த பேட் இவருக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


2013ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் விளாசிய பிறகு, இவரை Adidas நிறுவனம் அனுகியது. Adidas நிறுவனத்தினை முன்னிலைப் படுத்தும் போது இவர், காஷ்மீர் வில்லோவ் மற்றும் இங்லிஷ் வில்லோவ் மரங்களில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


அதன் பின்னர் கடந்த. 2015 ஆண்டு ரோகித் ஷர்மா CEAT நிறுவனத்தினை முன்னிலைப் படுத்தி விளையாடி வருகிறார். இதனால் CEAT நிறுவனத்திடமிருந்து ஆண்டுக்கு ரூபாய் 3 கோடி பெறுகிறார் ரோகித் ஷர்மா. 


லேஸ், ட்ரீம் 11, ஒப்போ, ஐஐஎஃப்எல் கோல்ட் லோன்ஸ், ராயல் ஸ்டாக், ட்ரூசாக்ஸ், சத்தம், ரெலிஸ்ப்ரே போன்றவை இந்திய கேப்டனால் அங்கீகரிக்கப்பட்ட சில நிறுவனங்களி பிராண்ட் அம்பாசிட்டராகவும் உள்ளார்.


இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரோகித் ஷர்மாவை இன்ஸ்டாகிராமில் 27.2 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்கிறார்கள், பேஸ்புக்கில் 20 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அதேபோல், ட்விட்டரில் 21.6 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கிறர்கள்.  சமூக வலைதளங்களில் ரோகித் ஷர்மாவின் ரீச் மிகப்பெரியது. 2023 இல் ரோகித் ஷர்மாவின் நிகர சொத்து மதிப்பு  சுமார் 214 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.