RCB vs SRH, IPL2022 Live: ஹசரங்கா சுழலில் ஆர்சிபி அணி அசத்தல் வெற்றி ..!

RCB vs SRH, IPL2022 Live: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்..!

Continues below advertisement

LIVE

Background

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்புத் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி மற்றும் 5 தோல்விகளை பெற்றுள்ளது. அத்துடன் அந்த அணி 4வது இடத்தில் உள்ளது.  அந்த அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளுக்கு பிறகு கடந்த போட்டியில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. 

அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி மீண்டும் ரன்கள் அடிக்க தொடங்கியுள்ளார். இதனால் அந்த அணியின் பேட்டிங்கிற்கு சற்று ஆதரவாக அமைந்துள்ளது. எனினும் அந்த அணியின் மற்றொரு முக்கியமான வீரரான மேக்ஸ்வேல் சற்று சொதப்பி வருகிறார். இது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை நடப்புத் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி மற்றும் 5 தோல்வியை பெற்றுள்ளது. கடைசியாக விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் அந்த அணி தோல்வியை தழுவியுள்ளது. இதன்காரணமாக இன்றைய போட்டியில் அந்த அணி வெற்றி பெற முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
18:20 PM (IST)  •  08 May 2022

RCB vs SRH, IPL2022 Live: எய்டன் மார்க்கரம் 21 ரன்களில் அவுட் !

சன்ரைசர்ஸ் அணியின் வீரர் எய்டன் மார்க்கரம் 21 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். 

18:07 PM (IST)  •  08 May 2022

RCB vs SRH, IPL2022 Live: 6 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் 39/2

6 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.

17:53 PM (IST)  •  08 May 2022

RCB vs SRH, IPL2022 Live: 3 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் 15/2

3 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்துள்ளது.

17:44 PM (IST)  •  08 May 2022

RCB vs SRH, IPL2022 Live: முதல் ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய ஆர்சிபி !

சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவரும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளனர். 

17:28 PM (IST)  •  08 May 2022

RCB vs SRH, IPL2022 Live: ஆர்சிபி 192 ரன்கள் குவிப்பு !

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 192 ரன்கள் குவித்துள்ளது.

17:27 PM (IST)  •  08 May 2022

RCB vs SRH, IPL2022 Live: கடைசி ஓவரில் அதிரடி காட்டிய கார்த்திக்..!

20வது ஓவரில் 3 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி தினேஷ் கார்த்திக் அசத்தினார்.

17:07 PM (IST)  •  08 May 2022

RCB vs SRH, IPL2022 Live: 18 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி 156/2

18 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.

16:48 PM (IST)  •  08 May 2022

RCB vs SRH, IPL2022 Live: 15 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 125/2

15 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.

16:35 PM (IST)  •  08 May 2022

RCB vs SRH, IPL2022 Live: 48 ரன்களுக்கு ஆட்டமிழந்த பட்டிதார்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜாட் பட்டிதார் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்.

16:30 PM (IST)  •  08 May 2022

RCB vs SRH, IPL2022 Live: அரைசதம் கடந்த டூபிளசிஸ் ..!

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டூபிளசிஸ்  33 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

16:18 PM (IST)  •  08 May 2022

RCB vs SRH, IPL2022 Live: 10 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி 93/1

10 ஓவர்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.

16:05 PM (IST)  •  08 May 2022

RCB vs SRH, IPL2022 Live: 7 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி 57/1

7 ஓவர்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.

15:34 PM (IST)  •  08 May 2022

RCB vs SRH, IPL2022 Live: முதல் பந்தில் ஆட்டமிழந்த கோலி..!

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகியுள்ளார்.

15:03 PM (IST)  •  08 May 2022

RCB vs SRH, IPL2022 Live: டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங்.. !

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

14:58 PM (IST)  •  08 May 2022

RCB vs SRH, IPL2022 Live: பச்சை நிற ஜெர்ஸியில் ஆர்சிபி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்ஸியில் களமிறங்குகிறது.