RCB vs SRH Score LIVE: சென்னைக்கு நெருக்கடி..கோலி அபார சதம்.. பெங்களூரு மிரட்டலான வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

Continues below advertisement

LIVE

Background

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் முடிவுகளை சென்னை அணி ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

ஐபிஎல் தொடர்:

நடப்பாண்டிற்கான ஐபிஎல் இறுதிகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில்,  இந்த வார இறுதியில் லீக் சுற்று முடிவடையவுள்ளது. களமிறங்கிய 10 அணிகளில் ஏற்கனவே டெல்லி மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் அதிகாரப்பூர்வமாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினை இழந்து விட்டன. அதேநேரம்,  குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே, இதுவரை அதிகாரபூர்வமாக பிளே-ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு 7 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பெங்களூரு - ஐதராபாத் மோதல்:

இந்த சூழலில் இன்று நடைபெறும் தொடரின் 65வது லீக் போட்டியில், டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி, மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியின் நேரலையை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

பெங்களூரு அணி நிலவரம்:

நடப்பு தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி தலா 6 வெற்றி மற்றும் தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் நீடிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, பிளே ஆஃப் சுற்றிற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். இதனால், இன்றைய போட்டியில் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு அணி களமிறங்குகிறது. பெங்களூரு அணியின் மும்மூர்த்திகளான டூப்ளெசிஸ், கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் நல்ல பேட்டிங் ஃபார்மை தொடருகின்றனர். வழக்கமாக பந்துவீச்சில் சொதப்பும் பெங்களூரு அணி கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், ராஜஸ்தான் அணியை வெறும் 59 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் கிடைத்த உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

ஐதராபாத் அணி நிலவரம்:

ஐதராபாத் அணியை பொறுத்தவரையில் 12 போட்டிகளில் விளையாடி நான்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. அதேநேரம், உள்ளூர் மைதானங்களில் விளையாட உள்ள கடைசி இரண்டு போட்டிகளிலும், ஆறுதல் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது. தொடரில் இருந்து வெளியேறிவிட்டதால் எந்தவிதமான அழுத்தங்களும் இல்லாமல் விளையாட முடியும் என்பதால் அவர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. டெல்லி அணி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது போன்று, பெங்களூரு அணிக்கு ஐதராபாத் அணி அதிர்ச்சி கொடுத்து விடுமோ என்ற அச்சமும் ஆர்சிபி ரசிகர்கள் இடையே நிலவுகிறது.

நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில், இரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஐதராபாத்தின் கரங்கள்தான் ஓங்கியுள்ளது. ஐதராபாத் அணி இதுவரை 12 போட்டிகளிலும் பெங்களூரு அணி 9 போட்டிகளிலும் வென்றுள்ளது. 

சென்னை அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு:

இதனிடையே, இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில் ஒருவேளை பெங்களூரு அணி தோல்வியுற்றால், சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றிற்கு செல்வது உறுதியாகிவிடும். ஒரு வேளை பெங்களூரு அணி வெற்றி பெற்றால், அடுத்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். அந்த போட்டியில் சென்னை அணி தோற்றுவிட்டால், பிளே-ஆஃப் வாய்ப்பிற்காக போராடிக்கொண்டிருக்கும் மும்பை, லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளின் வெற்றி தோல்வி தான் சென்னையின் விதியை தீர்மானிக்கும். இதனால், இன்றைய போட்டியின் முடிவு சென்னை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

கணிக்கப்பட்ட அணிகள் 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்: அன்மோல்பிரீத் சிங், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், ஃபசல்ஹக் ஃபரூக்கி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், வெய்ன் பார்னெல், கர்ன் சர்மா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்

Continues below advertisement
23:02 PM (IST)  •  18 May 2023

பெங்களூரு வெற்றி..

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

22:59 PM (IST)  •  18 May 2023

6 பந்துகளே மிச்சம்..

பெங்களூரு அணி வெற்றி பெற 6 பந்துகளில் 3 ரன்கள் தேவை

 

 

22:57 PM (IST)  •  18 May 2023

டூப்ளெசி அவுட்

71 ரன்களில் ஆட்டமிழந்தார் கேப்டன் டூப்ளெசி

22:51 PM (IST)  •  18 May 2023

கோலி அவுட்..

100 ரன்களை சேர்த்த கோலி புவனேஷ்வர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

22:48 PM (IST)  •  18 May 2023

கோலி அபார சதம்...

62 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார் கோலி

22:42 PM (IST)  •  18 May 2023

90-களில் கோலி

57 பந்துகளில் 91 ரன்களை குவித்துள்ளார் கோலி

22:41 PM (IST)  •  18 May 2023

4 ஓவர்கள் மிச்சம்..

கடைசி 4 ஓவர்களில் பெங்களூரு அணிக்கு 33 ரன்கள் தேவை 

22:36 PM (IST)  •  18 May 2023

150-ஐ தொட்ட பெங்களூரு..

15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 150 ரன்களை குவித்துள்ளது

22:28 PM (IST)  •  18 May 2023

70 ரன்களே தேவை..

பெங்களூரு அணி வெற்றி பெற 42 பந்துகளில் 70 ரன்களே தேவை

22:21 PM (IST)  •  18 May 2023

கோலி அபாரம்..

அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 35 பந்துகளில் அரைசதம் பூர்த்தி செய்தார்

22:20 PM (IST)  •  18 May 2023

100 ரன்கள் கூட்டணி..

11.1 ஓவரில் 100 ரன்களை சேர்த்தது கோலி - டூப்ளெசிஸ் கூட்டணி

22:19 PM (IST)  •  18 May 2023

டூப்ளெசிஸ் அபாரம்

34 பந்துகளில் அரைசதம் பூர்த்தி செய்தார் டூப்ளெசிஸ்

22:12 PM (IST)  •  18 May 2023

முடிந்தது 10 ஓவர்கள்...

10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 95 ரன்களை சேர்த்துள்ளது.

22:09 PM (IST)  •  18 May 2023

100-ஐ நெருங்கும் பெங்களூரு

9 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 90 ரன்களை சேர்த்துள்ளது

 

 

22:01 PM (IST)  •  18 May 2023

108 ரன்கள் தேவை..

பெங்களூரு அணி வெற்றி பெற 72 பந்துகளில் 108 ரன்கள் தேவை

21:58 PM (IST)  •  18 May 2023

முடிந்தது 7 ஓவர்கள்..

7 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 72 ரன்களை குவித்துள்ளது

21:55 PM (IST)  •  18 May 2023

மிரட்டும் கூட்டணி..

பவர்பிளேயின் 6 ஓவர்களில் 64 ரன்கள் சேர்த்த கோலி - டூப்ளெசி கூட்டணி

21:08 PM (IST)  •  18 May 2023

பெங்களூருவிற்கு 187 ரன்கள் இலக்கு

20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை எடுத்துள்ளது.

20:58 PM (IST)  •  18 May 2023

மிரட்டலான சதம்

அதிரடியாக விளையாடிய கிளாசென் 49 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்

20:57 PM (IST)  •  18 May 2023

கடைசி 12 பந்துகள்..

18 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 167 ரன்களை குவித்துள்ளது.

20:51 PM (IST)  •  18 May 2023

எகிறும் ரன் ரேட்..

17 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 160 ரன்களை குவித்துள்ளது

20:49 PM (IST)  •  18 May 2023

90-களில் கிளாசென்..

42 பந்துகளில் 91 ரன்களை குவித்துள்ளார் கிளாசென்

20:44 PM (IST)  •  18 May 2023

முடிந்தது 16 ஓவர்கள்..

16 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 141 ரன்களை குவித்துள்ளது.

20:43 PM (IST)  •  18 May 2023

வள்ளலாக மாறிய க்ரண் சர்மா

கரண் சர்மா வீசிய 15வது ஓவரில் ஐதராபாத் அணி 21 ரன்களை குவித்தது

20:42 PM (IST)  •  18 May 2023

இது தான் அழகு..

கிரிக்கெட் அதிரடிக்கு மட்டுமல்ல அழகான ஷாட்களுக்கும் பெயர் போனது.. அத்தகைய ஷாட்களை அநாயசமாக அடித்து வருகிறார் கிளாசென்

20:32 PM (IST)  •  18 May 2023

7 ஓவர்களே மிச்சம்..

13 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை சேர்த்துள்ளது

20:30 PM (IST)  •  18 May 2023

கேப்டன் காலி..

18 ரன்களை சேர்த்த நிலையில் மார்க்ரம் ஆட்டமிழந்தார்

20:25 PM (IST)  •  18 May 2023

100 ரன்களை கடந்த ஐதராபாத்...

11.5 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 100 ரன்களை எட்டியது

20:22 PM (IST)  •  18 May 2023

அதிரடியான அரைசதம்..

24 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தார் கிளாசென்

20:19 PM (IST)  •  18 May 2023

முடிந்தது பாதியாட்டம்..

10 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை சேர்த்துள்ளது.

20:17 PM (IST)  •  18 May 2023

50 ரன்களை சேர்த்த கூட்டணி

கிளாசென் மற்றும் மார்க்ரம் கூட்டணி 29 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது

20:13 PM (IST)  •  18 May 2023

முடிந்தது 9 ஓவர்கள்..

9 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 76 ரன்களை சேர்த்துள்ளது

20:07 PM (IST)  •  18 May 2023

விடாது அடிக்கும் கிளாசென்..

அதிரடியாக விளையாடி வரும் கிளாசென் 14 பந்துகளில் 29 ரன்களை குவித்துள்ளார்

20:02 PM (IST)  •  18 May 2023

50-ஐ எட்டிய ஐதராபாத்..

6.1 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 50 ரன்களை எட்டியது

20:00 PM (IST)  •  18 May 2023

முடிந்தது பவர்பிளே..

பவர்பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 49 ரன்களை சேர்த்துள்ளது.

19:56 PM (IST)  •  18 May 2023

முடிந்தது அசத்தலான ஓவர்

பிரேஸ்வெல் வீசிய போட்டியின் 5வது ஓவரில் வெறும் 6 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

19:54 PM (IST)  •  18 May 2023

ஓப்பனிங் விக்கெட்ஸ் காலி..

தொடக்க ஆட்டக்காரரான திரிபாதி 15 ரன்களில் நடையை கட்டினார்

19:51 PM (IST)  •  18 May 2023

வந்ததுமே விக்கெட்..

பிரேஸ்வெல் வீசிய தனது ஒவரின் முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார்

19:50 PM (IST)  •  18 May 2023

பார்னெலை அடித்த ஐதராபாத்..

வெயின் பார்னெல் வீசிய போட்டியின் நான்காவது ஓவரில் 16 ரன்களை சேர்த்தது ஐதராபாத் அணி

19:45 PM (IST)  •  18 May 2023

திணறும் ஐதராபாத்..

3 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் 11 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது

19:44 PM (IST)  •  18 May 2023

கோலி..கோலி..

ஐதராபாத் மைதானம் பெங்களூரு ரசிகர்களால் நிரம்பி, கோலி..கோலி முழக்கம் விண்ணை முட்டுகிறது

19:40 PM (IST)  •  18 May 2023

வந்தது பவுண்டரி..

2வது ஓவரின் கடைசி பந்தில் ஐதராபாத் அணி தனது முதல் பவுண்டரியை எட்டியது.

19:35 PM (IST)  •  18 May 2023

மிரட்டலான முதல் ஓவர்..

முதல் ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 2 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

19:23 PM (IST)  •  18 May 2023

பெங்களூரு அணி நிலவரம்..

இதுவரை 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பெங்களூரு அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள தனது 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

19:22 PM (IST)  •  18 May 2023

சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பு...

இன்றைய போட்டியில் பெங்களூரு அணி தோல்வியுற்றால், சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது எளிதாகிவிடும். இதனால் சென்னை ரசிகர்கள் இன்றைய போட்டியில்  ஐதராபாத் அணி வெற்றி பெற ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

19:20 PM (IST)  •  18 May 2023

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், வெய்ன் பார்னெல், கர்ன் சர்மா, சபாஷ் அகமது, முகமது சிராஜ்

இம்பேக்ட் பிளேயர்ஸ்:

தினேஷ் கார்த்திக், வைஷக் விஜய் குமார், ஹிமான்சு ஷர்மா, பிரபுதேசாய், கேதர் ஜாதவ்

19:19 PM (IST)  •  18 May 2023

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:

 அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ஹாரி ப்ரூக், ஹென்றி பிலிப்ஸ், அப்துல் சமத், கார்த்திக் தியாகி,  புவனேஷ்வர் குமார், மயங்க் தாகர், நிதிஷ் குமார் ரெட்டி

இம்பேக்ட் பிளேயர்ஸ்:

மயங்க் மார்கண்டே, நடராஜன், விஒவ்ராந்த் சர்மா, சன்விர் சிங், அகீல் ஹுசைன் 

19:18 PM (IST)  •  18 May 2023

ஐதராபாத் பேட்டிங்..

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு