PBKS vs RR, IPL 2023 LIVE: தோல்வியோடு தொடரில் இருந்து வெளியேறிய பஞ்சாப்; ராஜஸ்தான் வெற்றி..!

IPL 2023, Match 66, PBKS vs RR: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்திருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 19 May 2023 11:33 PM
PBKS vs RR Live Score: ராஜஸ்தான் வெற்றி..!

19.4 ஓவர்கள்  முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், பஞ்சாப் அணி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறியுள்ளது. 

PBKS vs RR Live Score: ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்ததும் அவுட்..!

தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி வந்த ஜெயஸ்வால் தனது விக்கெட்டை தனது அரைசதம் விளாசியதும் இழந்தார். 

PBKS vs RR Live Score: 100 ரன்களை எட்டிய ராஜஸ்தான்..!

12 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் சேர்த்துள்ளது. 

PBKS vs RR Live Score: சொதப்பிய சாம்சன்..!

கட்டாய வெற்றிக்கு போராடும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் 2 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

PBKS vs RR Live Score: 10 ஓவர்களில் ராஜஸ்தான்..!

10 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் சேர்த்துள்ளது. 

PBKS vs RR Live Score: அரைசதம் அடித்த படிக்கல் அவுட்..!

களமிறங்கியது முதல் அதிரடியாக ஆடி வந்த படிக்கல் 29 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியதுடன் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

PBKS vs RR Live Score: பட்லர் டக் அவுட்..!

கடந்த சில போட்டிகளாகவே  தடுமாறி வரும் பட்லர் இந்த போட்டியிலும் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

PBKS vs RR Live Score: முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரி..!

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரி விளாசியுள்ளார். 

PBKS vs RR Live Score: 188 ரன்கள் இலக்கு..!

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் சேர்த்தது. 

PBKS vs RR Live Score: அதிரடி காட்டிய ஷரூக் கான்..!

போட்டியின் 20 ஓவரில் ஷாரூக் கான் இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 18 ரன்கள் சேர்த்தார். 

PBKS vs RR Live Score: 18 ஓவரில் பஞ்சாப்..!

18 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. 

PBKS vs RR Live Score: அதிரடி காட்டிய ஜிதேஷ் சர்மா அவுட்..!

போட்டியின் 14வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிய ஜிதேஷ் சர்மா நான்காவது பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

PBKS vs RR Live Score: 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்..!

இக்கட்டான சூழலில் கைகோர்த்த சாம் கரன் மற்றும் ஜிதேஷ் சர்மா ஜோடி 39 பந்தில் 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர். 

PBKS vs RR Live Score: 100 ரன்களில் பஞ்சாப்..!

ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் மட்டும் சேர்த்து தடுமாறிக்கொண்டு இருந்த பஞ்சாப் அணி தற்போது 13 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை எட்டியுள்ளது. 

PBKS vs RR Live Score: 10 ஓவரில் பஞ்சாப்..!

10 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது. 

PBKS vs RR Live Score: தடுமாறும் பஞ்சாப்..!

9 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. 

PBKS vs RR Live Score: 50 ரன்களில் பஞ்சாப்..!

பஞ்சாப் அணி 6.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்ததுடன் 50 ரன்கள் எட்டியுள்ளது. 

PBKS vs RR Live Score: ருத்ரதாண்டவ லிவிங்ஸ்டனும் அவுட்..!

சைனி வீசிய 7வது ஓவரில் லிவிங்ஸ்டன் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். 

PBKS vs RR Live Score: பவர்ப்ளே முடிவில் பஞ்சாப்..!

3 விக்கெட்டுகளை இழந்துள்ள பஞ்சாப் அணி 6 ஓவர்கள் முடிவில் 48 ரன்கள் சேர்த்துள்ளது. 

PBKS vs RR Live Score: ஷிகர் தவான் காலி..!

ஆடம் ஜம்பா வீசிய 6வது ஓவரில் தவான் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

PBKS vs RR Live Score: 5வது ஓவரில் பஞ்சாப்..!

5 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளது. 

PBKS vs RR Live Score: அடுத்தடுத்து பவுண்டரி விளாசிய தாய்டே அதே ஓவரில் அவுட்..!

போட்டியின் நான்காவது ஓவரின் முதல் இரண்டு பந்தில் பவுண்டரிகள் விளாசிய தாய்டே அதே ஓவரின் நான்காவது பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

PBKS vs RR Live Score: எக்ஸ்பென்ஷிவ் சந்தீப்..!

போட்டியின் இரண்டாவது ஓவரினை வீசிய சந்தீப் சர்மா அந்த ஓவரில் 16 ரன்கள் வாரி கொடுத்துள்ளார். 

PBKS vs RR Live Score: முதல் ஓவரே விக்கெட்..!

போல்ட் வீசிய முதல் ஓவரில் பஞ்சாப் அணியின் ப்ரப்சிம்ரன் தனது விக்கெட்டை 2 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில் இழந்தார். 

PBKS vs RR Live Score: டாஸ்..!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜ்ஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

Background

ஐபிஎல் 16வது சீசனின் 66வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது தரம்சாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் அசோஷியேஷன் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 


இரு அணிகளும் கடந்த போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக 112 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படுதோல்வியை சந்தித்தது. அதேபோல், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியும் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் இரு அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்புகளும் முடிவுக்கு வந்தன. 


இந்த சீசனில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இது இரண்டாவது முறையாகும். முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளில் 64 ரன்களும்,  நாதன் எல்லிஸ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 


பிட்ச் அறிக்கை:


இந்த மைதானத்தில் உள்ள ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகள் அதிகளவில் ஸ்விங் ஆகும் என்பதால், இந்த மைதானத்தில் ஸ்கோர் குறைவாகவே பதிவாகும். இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி சேஸிங் செய்து வெற்றி பெறலாம். 


கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்: 


பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) : ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், சாம் குர்ரான், ஹர்பிரீத் பிரார், ரிஷி தவான், ககிசோ ரபாடா, நாதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங்.


ராஜஸ்தான் ராயல்ஸ் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஜோ ரூட், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், கே.எம்.ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்.


நேருக்குநேர்: 


இதுவரை இரு அணிகளும் 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 14 முறையும், பஞ்சாப் அணி 11 முறையும் வெற்றிபெற்றுள்ளது. 


முழு அணி விவரம்:


பஞ்சாப் கிங்ஸ் அணி:


ஷிகர் தவான் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அதர்வா டைடே, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, நாதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங், பிரப்சிம்ரன் சிங், சிக்கந்தர் ராசா, மேத்யூ ஷார்ட், ரிஷி தவான், மோஹித் ரதீ, ஹர்பிரீத் சிங் பாட்டியா, பானுகா ராஜபக்சே, பல்தேஜ் சிங், வித்வத் கவேரப்பா, குர்னூர் பிரார், சிவம் சிங்


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:


சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், ஜோ ரூட், துருவ் ஜூட்மி, துருவ் ஜுட்மி , ஆடம் ஜம்பா, சந்தீப் ஷர்மா, கே.எம். ஆசிப், யுஸ்வேந்திர சாஹல், தேவ்தத் பாடிக்கல், ரியான் பராக், குல்தீப் யாதவ், டொனாவன் ஃபெரீரா, நவ்தீப் சைனி, டிரென்ட் போல்ட், ஜேசன் ஹோல்டர், முருகன் அஷ்வின், ஆகாஷ் வசிஷ்ட், கே.சி கரியப்பா, ஓபேத் மெக்காய், குல்தீப் சென்காய், பாசித், குணால் சிங் ரத்தோர்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.