வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொள்கின்றன.  பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 


நேருக்கு நேர்:


ஐபிஎல் தொடரில் இதுவரை 28 முறை இந்த அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், பெங்களூரு அணி 13 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் முடிவு எடுதும் எட்டப்பவில்லை. குறிப்பாக சின்னசாமி மைதானத்தில் நடந்த இரு அணிகளுக்கு இடையேயான 9 போட்டிகளில் ராஜஸ்தான் 4 முறையும், பெங்களூரு அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சின்னசாமி மைதானத்தில் இதுவரை 90 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 43 போட்டிகளில் வெற்றியையும், 42 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.


நடப்பு தொடரில் இதுவரை:


இன்றைய போட்டியில் வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டி வரும் சூழலில், நடப்பு தொடரில் 4 வெற்றிகளுடன் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும், 3 வெற்றிகளுடன் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. 


விராட் கோலி கேப்டன்


கடந்த போட்டியைப் போலவே இந்த போட்டியிலும் விராட் கோலியே பெங்களூரு அணியை வழிநடத்துகிறார்.ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடும். அதே போல இந்த வருடம் இந்த போட்டியில்தான் ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்சியில் ஆட உள்ளது. பசுமையை முன்னிறுத்தும் வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கருதி இந்த செயலை அவர்கள் செய்வது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த ஜெர்சியை அணிந்து 11 முறை ஆர்சிபி அணி ஆடியிருக்கிறது. அதில் வெறும் இரண்டு முறை மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 8 முறை தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது. இதனால் ஆர்சிபி இந்த ஜிங்க்ஸை மாற்ற முயற்சிக்கும் என்று தெரிகிறது.


RCB சப்ஸ்: ஹர்ஷல் படேல், ஃபின் ஆலன், ஆகாஷ் தீப், கர்ண் ஷர்மா மற்றும் அனுஜ் ராவத்.


ஆர்ஆர் சப்ஸ்: அப்துல் பாசித், ஆகாஷ் வசிஷ்ட், டோனோவன் ஃபெரீரா, முருகன் அஷ்வின், கேஎம் ஆசிஃப்


ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்


ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன்


விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டு பிளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்