RCB vs RR, IPL 2022 LIVE: 4 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 42/0
RCB vs RR, IPL 2022 Live:
பெங்களூர் அணிக்கு எதிரான 2வது தகுதிசுற்றில் ராஜஸ்தான் அணி 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டி: அரை சதம் கடந்த ரஜத் பட்டிதர் அவுட்
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டி: வந்த வேகத்தில் ரன் சேர்த்து அவுட்டானார் மேக்ஸ்வெல். 15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 123/3
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் டு ப்ளெசி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 10 ஓவர்களுக்கு 1 விக்கெட்டை இழந்து 78 ரன்கள் எடுத்திருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் விராட் கோலி 7 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முடிவில் ஆர்சிபி அணி 8 ரன்கள் குவித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசியாக 2016ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதைத் தொடர்ந்து இந்தாண்டு மீண்டும் ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் எந்தவித மாற்றமும் இல்லை. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியே அதே அணியே இந்தப் போட்டியிலும் களமிறங்குகிறது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான ஆர்சிபி அணியின் எந்தவித மாற்றமும் இல்லை. லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டியில் களமிறங்குகின்றனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு செல்ல போகும் இரண்டாவது அணி யார் என்பது இன்று இரவு தெரிந்துவிடும். குஜராத் அணி ஏற்கெனவே இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.
Background
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால் இந்தப் போட்டியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டூபிளசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி எலிமினேட்டர் போட்டியில் அடைந்த வெற்றியுடன் வருகிறது. ஆர்சிபி அணியின் ராஜாட் பட்டிதார் கடந்த போட்டியில் சதம் கடந்து அசத்தினார். எனினும் கேப்டன் டூபிளசில் கடந்த சில போட்டிகளாகவே பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். விராட் கோலியும் டூபிளசிஸ் ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை இன்றைய போட்டியில் தருவார்கள் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரை வனிந்து ஹசரங்கா சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவர் நடப்புத் தொடரில் 25 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அத்துடன் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ராஜஸ்தான்ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் 25 முறை மோதியுள்ளன. அவற்றில் ஆர்சிபி அணி 13 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற கடைசி 5 ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த அணிகள் இரண்டு முறை மோதியுள்ளன. அவற்றில் ராஜஸ்தான் ஒரு முறையும், ஆர்சிபி அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தற்போது வரை விளையாடியுள்ள 15 போட்டிகளில் 718 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். அவருடன் சேர்ந்து சஞ்சு சாம்சன் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அவரும் 421 ரன்கள் விளாசியுள்ளார். பந்துவீச்சில் சாஹல் 26 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். இதனால் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் ராஜஸ்தான் அணி சம பலத்துடன் உள்ளது. ஆகவே இந்த இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி போட்டிக்கு எந்த அணி செல்லும் என்பது தொடர்பாக ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் விளையாடியுள்ள விராட் கோலி ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. ஆகவே அவருக்காக ஆர்சிபி அணி இம்முறை இறுதி போட்டிக்கு செல்ல வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் கருதுகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -