ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயாங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து பெங்களூரு அணிக்கு ராவத் மற்றும் டூபிளசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 


 


டூபிளசிஸ் மற்றும் ராவத் தொடக்கம் முதலே அதிரடி காட்ட தொடங்கினார். இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை விளாச தொடங்கினர். இதன்காரணமாக முதல் 6 ஓவர்களில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்தது.  அதன்பின்னர் அனுஜ் ராவத் 21 ரன்களில் ராகுல் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி களத்திற்கு வந்தார். அவர் களத்திற்கு வரும்போதே ரசிகர்கள் கோலி கோலி.. என்று குரள் எழுப்பி வந்தனர். 


 






இன்று விராட் கோலி தன்னுடைய 200ஆவது ஐபிஎல் இன்னிங்ஸில் களமிறங்கியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 200 இன்னிங்ஸிற்கு மேல் பேட்டிங் விளையாடிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு முன்பாக சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் ஐபிஎல் வரலாற்றில் 200 இன்னிங்ஸிற்கு மேல் பேட்டிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


 


இந்தச் சூழலில் விராட் கோலியின் 200ஆவது இன்னிங்ஸ் தொடர்பாக பலரும் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 









 






 




 


இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண