ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயாங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து பெங்களூரு அணிக்கு ராவத் மற்றும் டூபிளசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
டூபிளசிஸ் மற்றும் ராவத் தொடக்கம் முதலே அதிரடி காட்ட தொடங்கினார். இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை விளாச தொடங்கினர். இதன்காரணமாக முதல் 6 ஓவர்களில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் ராகுல் சாஹர் பந்துவீச்சில் அனுஜ் ராவத் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விராட் கோலி கேப்டன் டூபிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டூபிளசிஸ் 41 பந்துகளில் அரைசதம் கடந்தார். அப்போது டூபிளசிஸ் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் பவுண்டரி மற்றும் சிக்சர் மழை பொழிந்தனர். குறிப்பாக ஆட்டத்தின் 13ஆவது ஓவரில் இந்த இருவரும் சேர்ந்து 23 ரன்கள் அடித்தனர். அதைத் தொடர்ந்து 14ஆவது ஓவரிலும் இருவரும் 21 ரன்கள் எடுத்து அசத்தினர். இதனால் 14 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு அணி 136 ரன்கள் எடுத்தது. அதன்பின்னரும் இரண்டு பேரும் பெங்களூரு அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தி வந்தனர். இதன் காரணமாக பெங்களூரு அணி 17 ஓவர்களின் முடிவில் 168 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி வந்த டூபிளசிஸ் 57 பந்துகளில் 88 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 204 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் விராட் கோலி 41 ரன்கள் எடுத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்