RCB vs PBKS , IPL 2022 LIVE: 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப்.. ஸ்மித்-ஷாரூக் அதிரடி !
RCB vs PBKS LIVE: பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டி தொடர்பான உடனுக்குடன் தகவல்கள் இதோ..
ஓடின் ஸ்மித் மற்றும் ஷாரூக் கான் அதிரடியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற 18 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்படுகிறது.
பஞ்சாப் அணி வெற்றி பெற 24 பந்துகளில் 44 ரன்கள் தேவைப்படுகிறது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் முகமது சிராஜ் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 43 ரன்களுக்கு ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 11 ஓவர்களின் முடிவில் 116 ரன்கள் குவித்துள்ளது.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 9 ஓவர்களின் முடிவில் 84 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்துள்ளது.
மயாங்க் அகர்வாலின் விக்கெட்டை பெங்களூரு அணியின் ஹசரங்கா வீழ்த்தி அசத்தியுள்ளார்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 5 ஓவர்களின் முடிவில் 57 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு கேப்டன் டூபிளசிஸ் 57 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பெங்களூரு அணி 16 ஓவர்களின் முடிவில் 1 ஒரு விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 15 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. டூபிளசிஸ் 68 ரன்களுடனும், கோலி 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டூபிளசிஸ்-கோலி ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பெங்களூரு அணி 13 ஓவர்களின் முடிவில் 115 ரன்கள் எடுத்துள்ளது.
பெங்களூரு அணியின் ராவத் விக்கெட்டை பஞ்சாப் அணியின் ராகுல் சாஹர் வீழ்த்தினார். ராவத் 21 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவர்ப்ளே முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்களை எடுத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 5 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்துள்ளது.
பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டூபிளசிஸ் மற்றும் ராவத் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
Background
ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மயாங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியை டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -