ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ராஜஸ்தான் அணியுடன் குவாலிஃபையர் 2 போட்டியில் விளையாடும். தோல்வி பெறும் அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிடும். ஆகவே இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் வீரர்கள் தேர்வு தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு ஆங்கில விளையாட்டு தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதன்படி, “ஆர்சிபி அணி கடந்த போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை அணியில் எடுக்கவில்லை. அவருக்கு பதிலாக சித்தார்த் கவுலை அணியில் எடுத்தனர். அவர் சரியாக பந்துவீசுவில்லை. எனினும் ஆர்சிபி அணி அந்தப் போட்டியை வென்றது.
வெற்றி பெற்ற அணியை ஆர்சிபி அணி மாற்றுவது கடினம். இருப்பினும் விராட் கோலி முகமது சிராஜிற்கு ஆதரவாக இருந்தால் அவரை இன்று ஆர்சிபி அணி மீண்டும் எடுக்கும். விராட் கோலி கேப்டனாக இல்லாவிட்டலும் அவருடைய கருத்திற்கு அதிக மதிப்பு உண்டு. அவர் கூறும் பட்சத்தில் சிராஜ் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்பு உண்டு. என்னை பொறுத்தவரை முகமது சிராஜ் இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசவில்லை. ஆகவே அவர் அணியில் இடம்பெற தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நடப்புத் தொடரில் சிராஜ் 13 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். அவர் ஆர்சிபி அணியின் கடைசி போட்டியில் இவர் அணியில் இடம்பெறவில்லை. இவருக்கு பதிலாக அணியில் களமிறங்கிய சித்தார்த் கவுல் 43 ரன்கள் விட்டு கொடுத்தார். இதன்காரணமாக அவரை இன்றைய போட்டியில் அவரை மாற்றவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்தவரை ஏற்கெனவே அந்த அணி ஆர்சிபி அணியிடம் லீக் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஆகவே அதற்கு இந்த எலிமினேட்டர் போட்டியில் பழிவாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்